பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் உதித்த ஊர் 51 கூடப் பள்ளி, இளம்பாவூர், நெடும்பூர் முதலிய இடங்களில் இருக்கிருச்களாம், பி ள் ள ெய ன் ற பட்டம் வைத்துக் கொள்கிருர்கள். ஏறத் தாழ ஆயிரத்து எண்ணுறு பேர்கள் அந்தக் குடியைச் சார்ந்தவர்கள் இன்றும் இருக்கிருர்களாம். அவர் களுடைய வழக்கம் ஒன்றை நான் விசாரித்து அறிந்து கொண்டேன். - அப்பருடைய தமக்கையாராகிய திலகவதியா ருக்குக் கல்யாணம் செய்ய ஏற்பாடாயிற்று. கலிப்ப கையார் என்பவருக்குக் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். திருமணம் நடப்பதற்குள் அரச னுடைய ஏவலால் கலிப்பகையார் ஒரு போருக்குச் செல்லவேண்டி நேர்ந்தது. அப்போரில் அவர் இறந்துவிட்டார். இங்கே திலகவதியாருடைய தாய் தந்தையர் முன்பே இறந்தனர். தமக்குக் கணவராக வர இருந்தவர் இறந்தார் எனக்கேட்ட திலகவதியார் தாமும் தீப் புக எண்ணினர். ஆனல் மருள்நீக்கியார் என்ற இயற்பெயரோடு இருந்த அப்பர் அவர் காலில் விழுந்து அவ்வண்ணம் செய்ய வேண்டா மென்று கெஞ்சினர். அவர் உயிர் நீத்தால் தாமும் உயிர் விடுவதாக சொன்னுர். அது கேட்ட திலகவதி யார் தம் கருத்தை மாற்றிக்கொண்டு வாழ்நாள் முழு வதும் தவக்கோலம் பூண்டு திருவதிகையில் சிவத் தொண்டு புரிந்து கொண்டு வாழலானுர். முன்பே பெண் பேசித் திருமணம் நடப்பதற்குள் இடையூறு நேர்ந்து திலகவதியார் மணமின்றியே வாழ்ந்தார். இதை நினைந்து அக்குடியில் பிறந்த வேளாளர்கள் இக்காலத்தில் ஒருநாளில் பெண்ணேப்