பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வாருங்கள் பார்க்கலாம் "இந்த இடந்தான் அப்பருடைய வீடு இருந்த இடம். இந்தப் பாகம் இப்போது பொட்டலாக இருந் தாலும் இன்னும் வேளாளத் தெரு என்றே சொல்லு கிருேம். வீடு இல்லாவிட்டாலும் தெரு என்றே பெயர் மாறவில்லை” என்று விளக்கினர். மரத்தைப் பார்த்தேன். அதன் அடிமரத்தைப் பார்த்தாலே அது பல காலங் கண்டது என்று தெரிய வந்தது. பல முருடுகள் இருந்தன. இலைகளெல்லாம் மிகவும் சிறுத்திருந்தன. "இது இன்ன மரமென்று தெரிகிறதா ?’ என்று விசாரித்தேன். - தெரிந்தவர்கள் களரி வாகையென்று சொல் கிருர்கள். ஆல்ை அது குத்துச் செடிகளாக வளருமே ஒழிய இப்படி மரமாக வளர்வதில்லை. இது மாத்திரம் மரமாகவே வளர்ந்திருக்கிறது” என்று விடை வந்தது." - . அப்பர் சுவாமிகள் புகழனர் என்னும் வேளாளச் செல்வருக்கும் மாதினியார் என்னும் அன்னயாருக் கும் மதலையாகப் பிறந்தவர். அவருக்கு முன் பிறந்தவர் திலகவதியார்.அவர்கள் சைவ வேளாள குலத்தில் குறுக்கையர் குடியிற் பிறந்தவர்கள். அவர் களுடைய குலத்தில் உதித்தவர் யாரேனும் அவ்வூரில் இருக்கிருர்களா என்று விசாரித் தேன். யாரும் இல்லையாம். ஆனல் அருகே உள்ள

  • இப்போது இந்த இடத்தில் ஒரு மடம் கட்டி அப்பர் சுவாமி கள் திருவுருவத்தை நிறுவி வழிபட்டு வருகிருர்கள்.