பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வாருங்கள் பார்க்கலாம் தனியே இந்த ஊருக்குப் புராணம் எதற்கு? எல்லாவற்றையும்விடப் பெரிய புராணமாகிய பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியிருக்கும் சில பாடல் களே போதுமே: கோயிலில் ஒரே பிராகாரம். அதில் முருகன் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி. சின்னஞ் சிறிய கோயில். ஆனல் அங்கே எழுந்தருளியிருக் கும் முருகனுக்கு அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி யிருக்கிருள். தலைவியின் விரக தாபத்தை அறிந்த தோழி பாடுவதாக அமைந்திருக்கிறது பாட்டு. சீத மதியம் எறிக்கும் தழலாலே சிறி மதனன் வளைக்கும் சிலையாலே ஒதம் மருவி அலைக்கும் கடலாலே - ஊழி இரவு தொலைக்கும் படியோதான் ? மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும்; குமரேசா ! காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே ! காலன் முதுகை விரிக்கும் பெருமாளே! “மாது புகழை வளர்க்கும் திருவாமூர்' என்று அருணகிரி நாதர் சொல்கிருர். திலகவதியார் இந்தத் தலத்திலே பிறந்து இதன் புகழ் வளரும்படி செய்தார் என்ற கருத்தை நினைந்து அப்படிப் பாடுகிருர். “ஒரு மாது உன் பிரிவால் வருந்துவதை நீ கருத்திற் கொள் ளாமல் இருக்கிருயே! ஒரு மாது புகழை வளர்க்கும் இந்த ஊரிலே இப்படி நடப்பது நியாயமா? என்ற். குறிப்பை வைத்துச் சொல்லுகிருர், so முருகன் கோயிலுக்கு அருகேலகஷ்மி நாராயணர் கோயில் ஒன்றைப் புதிதாகக் கட்டி யிருக்கிருர்கள். பிராகாரத்துக்குள்ளே ஒரு பழைய கிணறு இருக்கிறது.