பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் உதித்த ஊர் 55. அதன் அருகே தலவிருட்சமாகிய சரக்கொன்றை திற்கிறது. அதில் எந்த நாளும் மலர் இருந்து கொண்டே இருக்கிறதாம். கிணற்றுக்கு அருகில் புதிதாகத் திலகவதியாரையும், அப்பர் சுவாமிகளேயும் பிரதிஷ்டை செய்திருக்கிருர்கள். இவ்வூரினர் இக் கோயிலைப் புதுப்பித்து 1946-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் செய்திருக்கிருர்கள். நல்ல வேளேயாகப் பழைய சுவர்களை அப்படியேவைத்திருக் கிருர்கள்.அவற்றில் கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒரு கல்வெட்டு, புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப" என்னும் மெய்க்கீர்த்தியோடு ஆரம்பமாகிறது. கி.பி. 1070 முதல் 11 18 வரையில் ஆட்சி செய்த முதற் குலோத்துங்க சோழனது மெய்க் கீர்த்தி அது. அவன் காலத்தில் இந்தக் கோயில் புதுப்பிக்கப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு முன்பே கோயில் இருந்தது. அப்பர் காலத்தில் இருந்த கோயில் அல்லவா? அவர் நாற்பத்தெண்ணுயிரம் பதிகம் பாடினுராம். அவற்றில் பல அழிந்து போயின. தாம் பிறந்த ஊரை அவசியம். அவர் பாடியிருப்பார். மறைந்த பாடல்களோடு திருவாமூர்ப் பதிகங்களும் மறைந்து போயின. கோயிலுக்குள் புகுந்தேன். சின்னக் கோயிலில் தனித் தனியே விரிவான சந்நிதியைக் காண முடியுமா ? சிவபெருமான் பசுபதீசுவரர் என்னும் திருநாமத்தோடு கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக், கிருர். அம்பிகை சந்நிதி.தெற்கு நோக்கியது. திரிபுர சுந்தரி என்பது அம்பிகையின் திருநாமம். சந்நிதியில்: ஆப்பர் சுவாமிகளின் பழைய சிலாவிக்கிரகம் இருட் டில் இருக்கிறது. உற்சவ விக்கிரகம் ஒன்றும் அங்கே