பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7? வாருங்கள் பார்க்கலாம் வைத்தது. அதன் பயன், அவர்கள் வாழ்வில் புதிய ஊக்கம் தழைத்தது. இந்த அமைதி சில ஆண்டு களுக்குத் தாங்கும். அது தேய்வதற்குள் அடுத்த ஆண்டுவிழா வந்து விடுகிறது அல்லவா ? வெறும் இலக்கிய ஆராய்ச்சியில் மாத்திரம் போதைப் போக்காமல் வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் மனத்தைப் பழக்குவதற்கு இத்தகைய, விழாக்கள் உதவின. இன்றும் அந்த விழாக்களேப் பேருக்கு நடத்தி வருகிருேம். ஆனல் நம்பிக்கையும் பக்தியும் இல்லாமல் போனமையால் விழாவில் பக்தி மணம் பரவுவதில்லே, மக்களுக்கு அமைதியும். கிடைப்பதில்லை. அப்பர் சுவாமிகளின் மூல விக்கிரகத்துக்கு முன், நின்றபோது அப்பெருமானுடைய பெருமையை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன். சூலை நோயில்ை படாத பாடு பட்டுத் துடித்துப்போன அந்த முதியவர் இப்போது கொந்தளிக்கும் அலைகடலில் கல்லேயே தெப்பமாகக் கொண்டு வீற்றிருக்கிருர் என்ற நினைவு. வந்தபோது, ஆண்டவனுடைய திருவருட் பலத் துக்கு மிஞ்சியது வேறு என்ன இருக்கிறது என்ற எண்ணம் தோன்றியது. அந்தப் பலத்தைக்கொண்ட, திருநாவுக்கரசருக்குச் சூலே பணிந்தது. கடல் கல்லே ஆழ்த்தாமல் ஏந்தியது. தீயானது சுடாமல், குளிர்ந்தது. நஞ்சு அமுதாயிற்று. -- திருநாவுக்கரசர் செய்த அற்புதங்களை நாம் நேரே இருந்து பார்க்கவில்லே. ஆனல் அவர் பாடியுள்ள தேவாரம் செய்யும் அற்புதத்தை இன்றும் காணலாம். கனமான கல்லே மிதக்க வைத்தது. அவர் பாட்டு என்று சொல்வார்கள். இன்று அந்தப் பாட்டு நெஞ்ச,