பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அதிகை 71. முத்தி பெற்ற நாளாகிய சதயத்தன்று விழா நிறை. வேறும். திலகவதியாரிடம் அப்பர் வந்து திருநீறு. பெறுவது, அப்பால் இருவரும் திருக்கோயிலுக்குள் போவது முதலிய காட்சிகள் இந்த விழாவில் நடை பெறுகின்றன. அடியார்களுடைய பெருமையை நினைக்கவும். போற்றவும் அவர்களே வழிபட்டு அந்த நெறியில் வாழவும் இந்த நாட்டினர் என்ன என்ன முறைகளே. மேற்கொண்டிருக்கிருர்கள்! மற்ற நாடுகளிலாளுல் படித்தவர்கள் சிலர் சேர்ந்து விழாக் கொண்டாடி நூலாராய்ச்சி செய்து பேசுவார்கள். இந்த நாட்டிலோ படித்தவர்களும் படிக்காதவர்களும் சேர் ந் து திருவிழாக் கொண்டாடுகிருர்கள். அப்பருடைய தேவாரத்தைப்பற்றித் தெரிந்து கொண்டவர்கள் சிலரே இருக்கலாம். ஆனல் அப்பரைப் பற்றியோ யாவரும் தெரிந்து கொண்டிருந்தனர். அப்பர் சுவாமிகள் உற்சவம் வரப்போகிறது என்ருல் முன் கூட்டியே எதிர்பார்த்து நின்றனர். உற்சவத்தில் கலந்து கொண்டனர். அப்பர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ வில்லையே என்ற குறைக்கே இடமின்றி. மீட்டும் அப்பர் பிறந்து வாழ்வது போன்ற பாவனை யில் திருவிழாவை நடத்திக் களிப்புற்ருச்கள். பல. பல சிக்கல்களையும் மேடு பள்ளங்களையும் உடைய வாழ்வில் சமுதாயம் அனைத்தும் ஒருங்கே சேர்ந்து மற்ற அல்லல்களைச் சில நாளேக்கு மறந்து அப்பர் சுவாமிகளுடைய நினைவோடு விழாவில் ஈடுபட்டார் கள். அடியார்களே உபசரித்தார்கள். அந்தச் சில நாட்களில் அவர்கள் பெற்ற அமைதி அவர்கள் மனத்தை ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலையில்