பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வாருங்கள் பார்க்கலாம் இந்த ஓர் இடத்தில்தான், எனக்குத் தெரிந்தவர்ை யில், அப்பர் சுவாமிகள் வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டேன். இதிலே எனக்குச் சிந்தனே ஒடியது. 'பணிவே உருவாக விளங்கியவர் திருநாவுக்கரசர். மற்ற மூவருமாவது அமர்ந்த கோலத்தில் இருக்கலாம். இவர் இப்படி இருக்கிறது அதிசயமாகத் தெரி கிறதே! என்று எண்ணமிட்டேன். "கீழே பீடத்தில் ஏதாவது வி ேச ஷ ம் உண்டோ?’ என்று கேட்டேன். “இது அப்பர் சுவாமிகள் கடலிலிருந்து கல்லேயே தெப்பமாகக் கொண்டு எழுந்தருளிய கோலம்" என்று குருக்கள் சொன்னுர், அந்த உருவத்தை வடித்த சிற்பி அதைக் கருதிச் செய்தானே, இல்லையோ, குருக்கள் சொன்னது என் ஐயத்தைப் போக்கியது. சைனர்களுடைய ஏவலால் அரசன் அப்பர் சுவாமிகளைக் கல்லேக் கட்டிக் கடலில் விட, அவர் பஞ்சாட்சரப் பதிகம் பாடிக் கரையை அடைந்தார். அப்படி அடைந்த இடம் இன்றும் கடலூருக்கு அருகே கரையேறவிட்ட குப்பம் என்று வழங்குகிறது. சொற்றுண வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணே யாவது நமச்சி வாயவே என்று தொடங்கும் பதிகம் கல்லைத் தோணி யாகக் கொண்டு பாடப்பெற்றது. இங்கே சித்திரை மாதத்தில் சுவாதி தொடங்கி அப்பர் சுவாமிகள் திருவிழா நடைபெறுகிறது. அவர்