பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அதிகை 69 யிட்டுக் கை குவித்த நிலையில் நிற்கிருர் அப்பெரு மாட்டியார். இந்த விக்கிரகமும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் அமைத்தது என்று தெரிய வந்தது. - - - தெற்குப் பிராகாரத்தில் திலகவதியாருடைய சந்நிதி இருக்கிறது. கையில் பூக்குடலையுடன் அவர் நிற்கிருர், திலகவதியார் இறைவனுக்கு மலர் தொகுத் துக் கொடுக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தா ரென்று அந்த விக்கிரகத்தின் அமைப்பே சொல்கிறது. திருநந்தவனத்தில் மலர் க அளக் கொய்து கொண்டு வந்து கொடுப்பதோடு, அவற்றை மாலே களாகவும் தொடுத்துக் கொடுத்தார் திலகவதியார் என்று சேக்கிழார் பாடுகிருர். புலர்வதன்முன் திருவலகு பன்னிமாறிப் புனிறகன்ற கலமலிஆன் சாணத்தால் கன் குதிரு மெழுக்கிட்டு மலர்கொய்து கொடுவந்து மாலைகளும் தொடுத்தமைத்துப் பலர்டிகழும் பண்பிளுல் திருப்பணிகள் பலசெய்தார். திலகவதியார் சந்நிதிக்கு அடுத்தபடி தெற்குப் பிராகாரத்தில் அப்பர் சந்நிதி ஒன்று இருக்கிறது. திருநாவுக்கரசர் கை குவித்துக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அங்கே எழுந்தருளியிருக்கிருர். நால்வருடைய திருவுருவங்கள் புல இடங்களில் மூல மூர்த்திகளாகவும் உற்சவ மூர்த்திகளாகவும் இருக் கின்றன. யாவும் நின்ற திருக்கோலத்திலே உள்ளன.