பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வாருங்கள் பார்க்கலாம் பிராகாரத்தைக் காணலாம். இங்கே அம்பிகையின் சந்நிதி இறைவனுக்கு வலப்பாகத்தில் இருக்கிறது. அப்பர் சுவாமிகளுடைய உற்சவ விக்கிரகம் உள்ள இடம் மேற்குப் பார்த்த சந்நிதியாக இருக் கிறது. இங்குள்ள திருவுருவம் கோவணம் பூண்ட நெடிய கோலமுடையது. இடக்கையில் உழவாரத் தோடு அம்மூர்த்தி எழுந்தருளியிருக்கிறர். நூறு ஆண்டுகளுக்குள்ள்ேதான் இதனை இயற்றியிருக்க வேண்டுமென்று தோன்றியது. - – c. "இதுதான் எப்போதும் உள்ள உற்சவ மூர்த்தியா ?' என்று கோயில் குருக்கள் ஒருவன்ரை விசாரித்தேன். -> "இதைத்தான் இப்போது உற்சவத்தில் எழுந் தருளச் செய்கிருேம். இதற்கும் முந்திய பழைய விக்கிரகம் ஒன்று கோயிலுக்குள்ளே அர்த்த மண்ட பத்தில் இருக்கிறது” என்ருர், அந்தப் பழைய திருமேனியைக் காணவேண்டும் என்ற ஆர்வம் உண்டாயிற்று. அதைப் பார்க்கும் போதே பழமை நன்ருகத் தெரிந்தது. கையைக் குவித்துக் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் முழங் காலுக்குமேல் ஆடை புனேந்தபடி விளங்குகிறர் நாவுக்கரசர். உழவாரம் இடத்திருத்தோளில் சார்த் தியபடி இருக்கிறது. இது சிறிய திருவுருவம். பழைய காலத்தில் உற்சவ நாட்களில் இந்த விக்கிரகத்தை அப்பர் பிறந்த திருத்தலமாகிய திருவாமூருக்கே எடுத்துச் சென்று அங்கிருந்து எழுந்தருளுவித்துக் கொணர்வார்களாம். - - - - கோயிலுக்குள் திலகவதியாருடைய உற்சவ விக்கிரகமும் இருக்கிறது. தலையில் கொண்டை