பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அதிகை 67 அந்த மடமும் இருக்கும்? அதே மடத்தை இப்போது பார்க்க முடியாது. ஆலுைம் அது இருந்த இடம் இருக்கிறது. அங்கே நல்ல முறையில் ஒரு மடம் கட்ட வேண்டும் என்ற முயற்சியும் நடந்ததாக அங்கே நிற்கும் தூண்கள் தெரிவிக்கின்றன. அந்த மடம் அன்பர்களுடைய முயற்சியினுல் நிறை வேறினுல் எவ்வளவு அருமையாக இருக்கும்! மடத்துக்குப் பின்னலே ஒரு நந்தவனம் இருக் கிறது. கெடில நதி சற்றே ஒதுங்கிச் செல்ல, அதிலிருந்து பிரிந்த சிறு கிளேயின் கரையில் அந்த நந்தவனம் வளர்கிறது. அந்தக் கிளேயைக் குட்டி யாறு என்று சொல்கிறர்கள். கெடிலமும் இதுவும் சேர்ந்து ஒரே ஆருக முன்பு இருந்திருக்கும். முன் போல் ஆற்றில் வெள்ளம் வராமையில்ை நடுவில் மேடிட்டுப் போய்க் கிளேயைப் போலக் காட்சி அளிக்கிறது. மேலே சொன்ன நந்தவனம் திலகவதி யார் பரிபாலித்த நந்தவனத்தின் பரம்பரை என்று சொல்கிருர்கள். கமுகும் வாழையும் மலர்ச்செடிகளும் வளர்ந்துள்ள அது இன்றும் நன்ருகவே இருக்கிறது. திலகவதியார் காலத்தில் எவ்வளவு சிறப்பாக இருந் திருக்க வேண்டும் இந்தத் தலத்தில் திருவாவடு துறை ஆதீனத்துக்குரிய மடம் ஒன்று இருக்கிறது. ஆதீனத்தைச் சார்ந்த தம்பிரான் ஒருவர் அங்கே இருந்து வருகிருர், திருக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதியை உடையது. முதலில் ஒரு கோபுரமும் பின் இடை நிலைக்கோபுரமும் உள்ளே கர்ப்பக்கிருகத்தின்மேல் விமானமும் இருக்கின்றன. இடைநிலைக் கோபுரத் தைத் தாண்டிச் சென்ருல் இறைவன் திருக்கோயிற்