பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வாருங்கள் பார்க்கலாம் ஆண்டு வந்தவன். அக்குலத்தில் வந்த ஒருவன் இவ்வூர்க் கோயிலே நிறுவியமையால் இதற்கு அதியரைய மங்கை என்ற பெயர் வந்தது. நாமக் கல்லில் உள்ள கோயிலுக்கு அதியேந்திர விஷ்ணுக் கிருகம் என்று பெயர். அதியேந்திரன், அதியரையன் என்பவை ஒருவனேயே சுட்டும் பெயர்கள்.

  • அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னே" என்று அப்பர் சுவாமிகள் பாடுகிருர்.

சிவபெருமானுடைய வீரச் செயல்களில் முக்கிய சமானவை எட்டு. அந்த எட்டுச் செயல்களையும் செய்த போது இறைவன் தாங்கிய கோலங்கள் எட்டு. ஒவ்வொரு வீரச் செயலுக்குரிய கோலத்தை யும் தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தலத்தில் சிறப்பாக வைத்துப் பூசித்து வருகிருர்கள். வீரச் செயல் செய்ததை நினைவுறுத்தும் இடமாதலின் வீரஸ்தானம் என்ற பெயர் அவற்றிற்கு வந்தது. அது அமாறி வீரட்டானமாகிப் பின்பு வீரட்ட மெனச் கிதைந்தது. எட்டுத் தலங்களாதலின் அட்ட விரட்டம் என்பார்கள். அந்த எட்டுத் தலங்களில் திருவதிகையும் ஒன்று. அதனுல் இதற்குத் திரு வதிகை வீரட்டம் என்ற பெயர் வந்தது. கெடில நதியின் கரையில் இருப்பதால் இதற்குத்திருவதிகைக் கெடில வீரட்டானம் என்றும் பெயர் அமைந்தது. இங்கே, திரிபுர சங்காரம் செய்த திருக்கோலத்தோடு இறைவன் எழுந்தருளியிருக்கிருன். கோயில் பழையது. பல கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்தில் திலகவதியார் ஒரு மடத்தில் இருந்து வாழ்ந்து வந்தார். அவர் எவ்வளவு அடக்க மாக இருந்தாரோ அவ்வளவு அடக்கமாகத்தானே