பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அதிகை 65 பாடப் பாட அவர் வேதனை குறைந்தது. உள் ளொளி கிளர்ந்தது. அவர் புதிய மனிதரானர். உணர்ச்சி விஞ்சியது. இசைப்பாடல்ாகப் பொழித் தார். இறைவன் செய்த பேரருளே எண்ணி எண்ணி வியந்தார். “இந்த ஏழையையும் ஆட்கொள்ளத் திருவுள்ளம் வந்ததோ! ஏற முடியாத குழியில் விழுந்த என்னேக் கரையேற்றிய கருணையை என்னென்று சொல்வேன்!” என்று உருகினர். இறைவன் அவருடைய உருக்கம் நிறைந்த பாடலேக் கேட்டு அருள் புரிந்தான். அசரீரியாக, 'திருநாவுக்கரசர் என்ற சிறப்புப் பெயர் கேட்க, அப்பெயர் மருள் நீக்கியாருக்கு உரியதாயிற்று. யாவரும் அவரைத் திருநாவுக்கரசர் என்றே வழங்கத் தலைப்பட்டனர். * * * 2 இந்த அற்புத நிகழ்ச்சி நடந்த திருத்தலம் திருவதிகை. நடுநாட்டில் பண்ணுருட்டி ரெயில் நிலையத்துக்கு முக்கால் மைல் தூரத்தில் கெடில நதியின் வடகரையில் இது இருக்கிறது; இதன் பெயர் அதியரைய மங்கை என்பது. அதுவே அதிகை என்று குறுகியது. அதிகாபுரி என்றும் சொல்வது உண்டு. சேரர் குலத்தைச் சார்ந்த ஒருகுலம் அதிய மான் அல்லது அதிகன் குலம். அதிராஜர் என்று அவ்வரசர்களைக் கூறுவார்கள். அவர்கள் கொங்கு நாட்டில் உள்ள தகடுரில் இருந்து வாழ்ந்தார்கள். கொங்கு நாட்டுக்கு அதிராச ராச மண்டலம் என்ற பெயர் பழங்காலத்தில் வழங்கி வந்தது. அதியமான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளல் தகடூரில் இருந்து வா.பா. - 5