பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,434 வாருங்கள் பார்க்கலாம் அவர் உயிர் உடம்பில் இருக்கும்போதே கூற்றத் தின் கொடுமையை உணர்ந்தவரைப்போலத்தான் துடித்தார். அது உடலுக்கு மாத்திரம் துன்பம் செய்ய வந்ததாகத் தெரியவில்லை. உயிருக்கே மோசம் வந்துவிடும் என்றே அவர் எண்ணினர். அணு அணுவாக உயிரைச் செதுக்கி எடுப்பதுபோல அல்லவர் அது நலிந்தது? சுவாமி, இதுவரையில் நான் உன்னே உடம்பால் வணங்கவில்லை. இனி உன்னே இரவும் பகலும் பிரியாது வணங்குவேன்' என்று கதறினர். அப்போது அவருக்குப் பழைய நிலை நினைவுக்கு வந்தது. ‘எம்பெருமானே, முன்பு நான் செய்கையால் உனக்கு வழிபாடு ஆற்ற வில்லையே ஒழிய, உன்னை எப்போதும் அடிமனத் திலே நினைத்துக்கொண்டுதானே இருந்தேன் ? உன் பூசை முதலியவற்றை நான் மறக்க முடியவில்லையே! மனத்தின் ஆழத்தில் நான் சலத்தையும் பூவையும் மறந்தறியேனே !' என்று புலம்பினர். கெஞ்சம்,உமக் கேஇட மாகவைத்தேன் கினையாதொரு போதும் இருந்தறியேன். சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் கலந்தீங்கிலும் உன்னே மறந்தறியேன் உன் குமம்என் நாவில் மறந்தறியேன். ஆம். ஒன்றையாவது அவர் மறக்கவில்லை. எல்லாம் உள்ளத்தினூடே நடந்து கொண்டிருந்தன. அறிவு என்னும் அலே மோத மோத உணர்ச்சிக் கரை சிறிதே கரைந்ததே ஒழிய அது அகன்ற பாடில்லே. இப்போது அவற்றையெல்லாம் சொல்லி அரற்றினர்.