பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அதிகை 83 'சூலை நோயால் வேதனைப்பட்டுக் குற்றுயிரும் 'குலையுயிருமாக வந்திருக்கிறேன். இனிமேல் என்னேக் கரையேற்ற வேண்டும்” என்று அவர் அழுதார். 'சைவ குலத்தில் பிறந்தும் ஏதோ பள்ளத்தில் போய் விழுந்தாயே; எருந்திரு” என்று திலகவதியார் கூற அவர் எழுந்தார் : அப்போதே அவருடைய வாழ்க்கையும் எழுச்சிக்குரிய நிலையைப் பெற்றது. “இறைவன் திருவருள்தான் உனக்குச் சூலே நோயைத்தந்து ஆட்கொண்டது. அவனடியையன்றி வேறு புகலில்லை” என்று சொல்லித் திலகவதியார் திரு நீற்றை எடுத்துப் பஞ்சாட்சரத்தைச் சொல்லித் தம்பி யார் கையில் அளித்தார். அவர் அதைப் பணிவோடு வாங்கி அணிந்துகொண்டு தமக்கையாரைப் பின் தொடர்ந்தார். அப்போதுதான் திருப்பள்ளியெழுச்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. கங்குல் புலர்ந்தது. இறைவன் திருக்கோயிலே வலஞ்செய்து கோயிலுக் குள்ளே சென்று சந்நிதி முன் அடியற்ற மரம் போல வீழ்ந்தார். கூற்றைப் போல உயிர் கொள்ள வந்த தம் வேதனையை விலக்க வேண்டுமென்று அகத் தெழுந்த பேருணர்ச்சி பாட்டாக வந்தது. கூற்ருயின வாறு விலக்ககிலிர் கொடுமைபல செய்தன நான் அறியேன் ஏற்ருய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேன் அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே !