பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.62 வாருங்கள் பார்க்கலாம் உயிர் தாங்கினர். அத்தகையவரைப் பிரிந்து வாழ்ந் தார் தருமசேனர். பழைய அன்பு இப்போது சமயத் தில் வந்து வட்டியும் முதலுமாகப் பற்றியது. தம்முடைய சமையற்காரனிடம் தாம் படும் வேதனையை இரவோடு இரவாகச் சொல்லியனுப்பி ஞர் தருமசேனர். அவனுக்கு அவரிடம் உண்மை யான அன்பு இருந்ததற்கு இந்தச் சான்றே போதுமே. இல்லையானல், இவர் நம் சமயத்துக்குத் துரோகம் செய்ய எண்ணுகிருர்’ என்று உடனே தூற்றப் புறப் பட்டுவிட மாட்டானு ? அவன் சென்று திலகவதி யாரை அணுகி அவருடைய தம்பியார் நிலையை எடுத்துச் சொன்னன். திலகவதியார் அது கேட்டு, 'அமணர் இருக்கும் இடத்துக்கு நான் வர மாட்டேன்' என்று சொல்லியனுப்பி விட்டார். - அதைக் கேட்ட தருமசேனர், இனி இங்கிருந்து இந்த நோயினுல் உயிர்தீர்வதைவிட நம் தமக்கையா ரிடம் போய்ச் சேர்வதே நலம் என்று கருதிப் புறப் பட்டார். சைனர்களுக்குரிய சின்னங்களேயெல்லாம் அங்கே போட்டுவிட்டு, ஒரு வெள்ளாடையால் உடம்பையெல்லம் மறைத்துக்கொண்டு இரவில் நடந்து திருவதிகையை அடைந்தார். தம் தமக்கை யாரை எண்ணிய போதே அவருக்கு ஒரு வகை ஊக்கம் உண்டாயிற்று நடக்கவும் முடிந்தது. திலகவதியார் திருவதிகையில் ஒரு திருமடத்தில் இருந்து வந்தார். அந்த மடத்தை அடைந்து உள்ளே புகுந்து தமக்கையார் காலில் விழுந்தார். 'தம்பி வந்தாயா ? என்று அன்பொழுகக் கேட்டார் திலகவதியார்.