பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அதிகை, ᏮᎥ தன்மையிலே ஈடுபட்டு அன்பு செய்தவன். அவன் அன்போடு தரும் உணவில் குறைபாடு இருக்க நியாயம் இல்லை. - வயிற்று வலி கடுமையாயிற்று. மருந்து உண் டார். விரதம் இருந்தார். குடலைச் சுருட்டி முட்க்கித் துன்புறுத்தியது வயிற்றுவலி. அது வெறும் வயிற்று. வலியாக இருக்கவில்லை ; சூலை நோயாக இருந்தது. சைனர்கள் மந்திரம் போட்டார்கள், நோய் தீரவில்லை. நாட்கள் கழிந்தன. வாரங்கள் சென்றன. நோயும் கடுமையாயிற்று. தருமசேனர் சூலே நோயால் துடிதுடித்தார். சைன நூல்களின் நுட்பங்களே ஆராய்ந்த அவருடைய அறிவு எங்கோ போய் ஒளிந்து கொண்டது. அவர் உடம்பின் வேதனை தான் இப்போது பெரிதாக இருந்தது. சைன மதச் சிங்கமாக இருந்த அவர் சூல்ேநோய் கண்டிஇழுக்கப் புழுப்போலத் துடிதுடித்தார். பாம்பின் வாய்ப்பட்ட தேரைபோல் கதறிஞர். உயிரையே உண்டுதான் திரும் இந்தச் சூல்நோய் என்ற எண்ணம் அவ்ருக்கு வந்துவிட்டது. і - і "அக்கா' என்று அழுதார். உடம்போடு ஒட்டிய உறவு என்று சொல்லத் திலகவதியார் ஒருவரே இருந்: தார். அப்பெருமாட்டியின் மெய்யன்பைத் தரும சேனர் நன்கு உணர்ந்தவர். தமக்கு மணம் பேசி யிருந்த கலிப்பகையார் போரில் இறந்து படவே, திலக வதியார் தாமும் தீப் புகுந்து உயிர்விடத் துணிந்தார். அப்போது மருள்நீக்கியார் அவர் காலில் விழுந்து, 'நீர் உயிர் விட்டால் நானும் உயிர் விடுவேன்’ என்று கதறினர். அது கேட்டு இரங்கி, தம் தம்பி யார் உளராக வேண்டும் என்ற விருப்பத்தால் அவர்