பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ வாருங்கன் பார்க்கலாம் உடம்பு சைனக் கோலத்தில் இருந்தாலும் உள்ளம் சைவ வாசனை வீசுகிறது. நடுநடுவே அறிவு ம்ோதுகிறது. இந்த மோதல் ஒரு நாளா, இரண்டு நாளா ? இந்த இடத்துக்கு வந்தது முதலே இந்தப் போராட்டந்தான். - - - - டணுர் டணுர் : டணுt'- இது திருப்பாதிரிப் புலியூர்த் தோன்ருத்துணையப்பர் திருக்கோயில் மணி ஓசை தருமசேனர் உடம்பு புல்லரித்தது. நெற்றி யைத் தடவிக்கொண்டார். திருநீற்றின் நினைவு போலும் அவர் உள்ளத்துள்ளே ஒரு நாக்கு இருக் கிறதே, அது ஹரஹர என்ற ஒலியை முழங்கியது. இப்படித் தருமசேனர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தார். எதையாவது ஒன்றை எறிந்து விட லாமென்று எண்ணினுர், அறிவு புறத்தை விட உடம் படவில்லை. உணர்ச்சியோ உள்ளத்தைப் பற்றிக் கொண்டு ஒன்றி நின்றது. அங்கே, திருவதிகை வீரட்டானத்தில், திலகவதி யார் நாள்தோறும் வீரட்டேசுவரரிடம் தம்முடைய தம்பியை மீட்டுத் திருவருளுக்கு ஆளாக்க வேண் டும் என்று விண்ணப்பம் செய்து கொண்டு வந்தார். அவருடைய பிரார்த்தனே பயன் தரவேண்டும் அல்லவா ? இறைவன் தருமசேனருடைய இரட்ட்ை வாழ்க்கையைப் போக்கத் திருவுள்ளம் கொண்டான். திடீரென்று தருமசேனருக்கு வயிற்று வலி உண் டாயிற்று. உணவில் எந்த வகையான மாற்றமும் இல்லை. அவருக்கு உணவு சமைத்துத் தருகிறவன் அவரிடம் மிக்க அன்பு பூண்டவன். சைன மத ஆசிரியர் என்ற முறையில்ன்றி அவரிடமுள்ள தனித்