பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அதிகை 59. தமக்கையாராகிய திலகவதியார் நீராடிவிட்டுத் திருக் கோயிலே மெழுகுவார்; அலகிடுவார்; திருநந்தவனத் திற் புக்கு மலர்களைக் கொய்வார்; தம்முடைய ஆத்மார்த்த பூசையைச் செய்வார். திருவதிகைத். திருக்கோயிலில் திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். இந்த நினைவுகள் தருமசேனருடைய உள்ளக் கிழியில் உருவெடுத்தன. அந்தப் பெண்மணியார் தாம் பிறந்த குலத்துக்குப் பெருமை தேடும் வகையில் சிவபக்திச் செல்வம் நிறைந்தவராய் விளங்கத் தரும சேனரோ-? இதை நினைக்கையில் அவருக்கு உள்ளம் துணுக்குற்றது. அப்போது அறிவு தான் படித்தநூல்களின் நுணுக்கங்களையெல்லாம் எடுத்துக் காட்டியது. ஆலுைம் ஏதோ ஓர் உணர்ச்சி உள்ளத் தின் ஆழத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவர் தம் மனத்தினலே தாம் பிறந்த திருவாமூர்க் கோயி லுக்குள் புகுந்தார்; வணங்கவும் வணங்கினுர், சே என்ன பைத்தியக்காரத்தனம் இது? கிழிந்: தெரிந்த ஆடையைத் தைத்து அணிவதா? பல காலம் ஆராய்ந்து பொருத்தமானதென்று எண்ணி, இறங்கின துறையை மாற்றுவதா? - அறிவு முரணியது. . ஆளுலும் உள்ளுணர்ச்சியின் ஈரம் உலரவில்லை. இப்பொழுது அவர் தம் தமக்கையார் அருகில் நின்ருர்; நினைவுலகத்தில்தான். இறந்துபோன அவருடைய தந்தையார் சிவ லிங் க த் து க்கு அபிஷேகம் செய்கிருர்; அருச்சனை செய்கிருர் . கண்ணிர் வாரத் துதிக்கிருச் : , , or