பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகைத் திருக்கோயில் - 75. அங்கே உள்ள வண்ணச் சுதை வடிவம் கண்ணில் தெரிகிறதா? இறைவனுடைய திருமணக் கோலத் தைச் சிற்பி எவ்வளவு அழகாக வடித்திருக்கிருன்சீ சற்றே கூர்ந்து பாருங்கள். ஆம்; இதில் கவனிக்க வேண்டிய புதுமை ஒன்று இருக்கிறது. எங்கும் பரம சிவனுக்கு இடப் பாகத்தில்தான் பார்வதியம்மை இருப்பது வழக்கம். இந்தத் திருமணக் கோலத்தில் அம்பிகை எம்பெருமானுடைய வலப்புறத்திலே நிற்கிருள். தல வரலாற்றைக் கேட்டவர்களுக்கு இந்தப் புதுமை விளங்கும். அம்பிகை தவம் செய்து இந்தத் தலத்தில் இறைவனைத் திருமணம் செய்து கொண்டாள். 'நான் தேவரீருடைய வலப் பாகத்தில் இருக்க வேண்டும்' என்று வரம் பெற்ருள். அதனல் இந்தத் திருமணக் கோலத்தில் அம்பிகை வலப் புறத்தே நிற்கிருள் இங்கே மட்டும் என்ன? உள்ளே உள்ள சில சிற்பங்களிலும் இந்த நிலையைக் காணலாம். இறைவன் சந்நிதிக்கு வலப் பாகத்தே தான் அம்பிகையாகிய பெரியநாயகியின் திருக்கோ யில் இருக்கிறது. இந்த முன் மண்டபத் துரண்களில் சில அன்பர்களுடைய வடிவங்கள் இருக்கின்றன. மண்டபத்துக்குத் தெற்கே குருக்கள் வீடு, வடக்கே திருவாவடுதுறை மடம். மண்டபத்தை அடுத்துக் கோபுர வாசல் இருக்கிறது. கோபுரம் ஒரளவு பெரி தென்றே சொல்ல வேண்டும். கோபுர வாசலுக்குள் கண்ணே மூடிக்கொண்டு. நுழையாதீர்கள். கண்ணேத் திறந்து பார்த்து இன்புறு. வதற்கு ஏற்ற சிற்ப வடிவங்களைக் காணுமற் போக லாமா? இருபக்கச் சுவர்களிலும் நடனமிடு மடவாரின்