பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வாருங்கள் பார்க்கலாம் பல வகைக் கூத்துக்களைக் காண்கிருேம். எத்தனை வகையான கூத்துக்கள்! இந்த மாதிரி நடனமிடுபவர். களின் உடம்பு மெழுகால் அமைந்திருக்குமோ? எப்படியெல்லாம் வளைந்து காட்டுகிருர்கள்! அவர் களின் நெகிழ்வும் குழைவும் வளைவும் மெழுகை நினைக்கச் செய்தாலும், சிற்பி என்னவோ எல்லா வற்றையும். கல்லிலேதான் உருவாக்கி யிருக்கிருன். ஊர்த்துவ தாண்டவம் என்ருல் உங்களுக்குத் தெரியுமே; ஒரு கால மேலே தூக்கி ஆடும் நடனம் ஆது. திருவாலங்காட்டில் சிவபெருமான் காளியோடு நடனத்தில் போட்டியிட்டார். பல விதமாக அவர் ஆடினர் ; காளியும் ஆடினுள். ஆனல் ஊர்த்துவ தாண்டவமாடிய போது, பெண்ணுகிய காளி அவ் வாறு செய்ய இயலாமல் தோல்வியுற்ருளாம். அந்தக் காளியில்ை ஆடமுடியாத ஊர்த்துவதாண்ட வத்தை இதோ ஒரு பெண் ஆடிக் காட்டுகிருள்! இங்கே உள்ள கூத்து வகைகள் எல்லாவற்றையும் ஆர அமரப் பார்க்க நேரம் இல்லை. சிவபெரு மானைத் தரிசிக்க வேண்டாமா ? கோபுர வாசலின் படியைத் தாண்டும்போது இருமருங்கும் உள்ள மெல்லியலாரைப் பாருங்கள். கொடியைப் பற்றிக்கொண்டு ஒல்கிய கொடி போலவே நிற்கும் அணங்குகள் அவர்கள். என்ன ஒயில்! என்ன எழில்! கோபுர வாயிலேத் தாண்டி உள்ளே புகுவோம். இதோ ஒரு பெரிய முற்ற வெளி. இதன் நடுவே ஒரு நாலுகால் மண்டபம். இதற்குத் தெற்கே உள்ள குளந்தான் சக்கர தீர்த்தம். அதை அடுத்து ஒரு சிறிய மண்டபம் இருக்கிறதே, அதில்தான் உற்சவ்