பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0 வாருங்கள் பார்க்கலாம் அதைத் தாங்குபவரைப் போலச் சில பூதகணங்கள் இருக்கின்றன. அந்தக் கணங்களைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது. திரிபுர சங்காரம் செய்யும்போது சிவபிரான் சிரித்ததை நாம் பார்த்ததில்லை. இந்தப் பூதகணங்கள் கையை விரித்துக்கொண்டு விமானத் தைச் சுமப்பதாகக் காட்டும் வேடிக்கையைக் கண்டு தான் இப்போது அவன் சிரிக்கிருன் போலும் ! அம்பிகையின் திருக்கோயிலே வலம் வந்து விமா னத்தின் மேல்புறத்தையும் பார்த்துக்கொண்டு வடக்கே வரலாம். இங்கும் பல உருவங்களைக் காண் கிருேம். துர்க்கை, கோவர்த்தன கோபாலன் முதலி யவர்களேத் தரிசித்துக் கொள்ளலாம். இராவணன் கைலை மலேயைத் தூக்கும் காட்சியும் இங்கே இருக் கிறது. இவரைப் பாருங்கள். இவர் திருவடிகளைக் கவனித்தீர்களா? திருவடிகள் இல்லை; திருவடி ஒன்றுதான் இருக்கிறது. ஆம் சிவபெருமானுட்ைய பல வகையான மூர்த்தங்களில் ஏகபாத மூர்த்தி என்பதும் ஒன்று. ஒரே காலேயுடைய கோலம் அது. சற்றே இப்படிப் பாருங்கள். இவர் யார் தெரி கிறதா? இவருக்குக் கால் மூன்று, கையோ ஏழு; தலே இரண்டு. ஒன்றுக்கொன்று பொருத்தமாகவே தோன்றவில்லை. இவர் அக்கினி பகவான். இவருக்கு அருகில் நிற்பவள் இவருடைய தர்மபத்தினி சுவாகா தேவி. அக்கினி பகவான் என்பதைப் புலப்படுத்தச் சிற்பி அருகில் தீக்கொழுந்தைக் காட்டி யிருக்கிருன். இப்ப்ோது நாம் வடக்குப் பிராகாரத்தில் நிற்கிருேம். இதோ இருக்கிறதே, இந்தக் கிணற்றுக்