பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகைத் திருக்கோயில் 79 பார்த்தோம். தெற்குப் பிராகாரத்தின் திருமாளிகைப் பத்தியில்தான் திலகவதியார் அப்பர் சுவாமிகளின் சந் நிதிகள் உள்ளன. இங்கே தல விருட்சமாகிய சரக் கொன்றை நிற்கிறது. அப்பர் பிறந்த ஊராகிய திருவா மூரிலும் தலவிருட்சம் சரக்கொன்றைதான். தெற்குப் பிராகாரத்தில் இறைவனுக்குப் பக்கத் தில் அம்பிகை கோயில் இருக்கிறது. பிருகந்நாயகி என்று வட மொழியிலும் பெரிய நாயகி என்று தென் மொழியிலும் அம்மைக்குப்பெயர்கள் வழங்குகின்றன. அம்பிகையின் கோயிலே ஒ ட் டி யே சிவபெரு மானுடைய கர்ப்பக் கிருக விமானம் இருக்கிறது. விமானத்தின் அடியிலிருந்தே சிற்பவடிவங்கள் ஒளிர் கின்றன. விநாயகர், திருக்கல்யாண மூர்த்தி, நட ராஜா முதலிய பல வடிங்களேப் பார்க்கிருேம். இந்த விமானம் எண்கோண முள்ளது. அங்கங்கே சிறு சிறு புரைக்குள் சில அழகிய உருவங்கள் இருக்கின் றன. - இதோ பாருங்கள். இவர்தாம் திரிபுர சங்கார மூர்த்தி. அட்ட வீரட்டங்களுள் ஒன்று இத் தலம் என்பது முன்பே உங்களுக்குத் தெரியும். திரிபுர சங் காரச் செயலுக்குரிய மூர்த்தியைத் தலைவனுகக் கொண்டு வழிபாடு நடத்தும் தலம் இது. இந்தப் பெருமானுக்குப் பன்னிரண்டு கரங்கள் இருக்கின்றன. தேரின்முன் பிரம்மா சாரதியாய் அமர்ந்திருக்கிருர், இறைவன் காலே மடித்துப் போருக்கு ஆயத்தமாக இருக்கிருன். வில்லை வ8ளத்து அம் ைபக் கோத் தான். ஆனல் அம்பை விடவில்லே. புன் முறுவல் பூத்துப் புரம் மூன்றையும் எரித்துவிட்டான். விமானத்தின்மேல்