பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*78 வாருங்கள் பார்க்கலாம் என்ற செய்தி வருகிறது. இந்தப் பக்கங்களில் மிகப் பழங்காலத்தில் பெளத்தர்களும் சைனர்களும் - சைவர்களும் வாழ்ந்து வந்தார்கள். திருநாவுக்கரசர் சைன சமய ஆசாரியராக இருந்தபோது பெளத்தர் களே வாதில் வென்ருர் என்று சேக்கிழார் சொல் கிருர். அதனுல் அக்காலத்தில் இப் பக்கங்களில் பெளத்தர்களும் இருந்திருக்க வேண்டும். பிற்காலத் திலும் இருந்தார்கள் போலும் அவர்கள் வழிபடுவ தற்காகப் புத்தர் கோயில் ஒன்றை நரலோக வீரன் அமைத்தான். பாட்டு, புத்தர் கோயிலே அமைத் தான் என்று தெளிவாகச் சொல்லவில்லை. முன்பே இருந்த புத்தர் கோயிலுக்கு இறையிலி நிலங்களே வழங்கினன் என்றும் பொருள் செய்து கொள்ளலாம். எப்படியானலும் இந்த ஊரில் புத்தர் கோயில் ஒன்று இருந்தது என்பது உண்மை நாளடைவில் பெளத்தர்கள் மறைந்தனர். புத்த விகாரமும் மறைந் தது. புத்தர் மாத்திரம் சிவபிரான் திருக்கோயில் முற்ற வெளியிலே வானமே கூரையாக மாரியே திரு மஞ்சனமாக எழுந்தருளியிருக்கிறர். இந்த முற்றத்தைக் கடந்தால் அப்பால் இடை திலக் கோபுரம் இருக்கிறது. இதையும் கடந்து புகுந்தால் திருக்கோயிற் பிராகாரத்துக்குள் அடியிடு வோம். திருக் கோயிலே வலமாக வரலாமா? சந்நிதிக்கு நேரே வாசல் இல்லே. தென் புறத் தில் உள்ள படிக்கட்டில் ஏறிக் கோயிலுக்குள் செல்ல வேண்டும். இப்படிச் சில கோயில்கள் அமைந்திருப் பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெற்குப் பிரா காரத் தொடக்கத்தில் மேற்கு நோக்கி அப்பர் உற்சவ மூர்த்தி எழுந்தருளி யிருக்கிருர். இவரை முன்பே