பக்கம்:வார்த்தை வாசல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலைமகள்போல் அவள்வாழ்ந்தாள் எனினும், நெஞ்ச வீதியிலே ஒருவனத்தான் நடக்க விட்டாள். மலைமலராம் செங்காந்தள் கரத்தி ஞலே

மனத்துக்குள் நுழைந்தவனத் தழுவு தற்குச் சிலையழகி காத்திருந்தாள். முடிவில் மங்கை

சிறுதுரும்பு போலாகி மாண்டு விட்டாள். கலையழகன் அவள் பிணத்தைக் கண்டான் ; கத்தும்

கடற்கரையில் அன்னவனும் மாண்டு போனன்.

வெள்ளைநிறம் புரிகின்ற புருவைப் போல

விசபாரி உயிர்விட்டாள் அவனுக் காக . தெள்ளுதமிழ் கற்ருேனும் என்றன் வாழ்வும்

திரட்டும்’ ’ எனச்செத்தான் அவளுக் காக. உள்ளபடி காதலித்த மாதும், உண்மை

உணர்ந்தோனும் மரணத்தால் ஒன்று பட்டார். துள்ளியெழும் கருங்கடலின் அருகே கண்ணிர்த்

துன்பத்தைக் கதை நிகழ்ச்சி காட்டக் கண்டோம்.

சடங்குமனம் கொண்டோரை எதிர்த்து வெல்லும்

சக்தி பெற்ற தமிழ்ச்செல்வன் அவர்கள், நெஞ்சைத்

தொடுங்கதையாய் இக்கதையை எழுதி, மக்கள்

துரக்கத்தைப் போக்குகின்ருர் திறமை யோடு !

நெடுங்கதைகள் மூங்கிலப்போல் நீட்டம் காட்டி

நிற்பதனால் பயனில்லை : மலேறி லத்தில்

படும்பொருள்போல் பயன்விளேக்க வேண்டும் ; அந்நூல்

பாராட்டும் உரைநடையால் விளங்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/11&oldid=645693" இலிருந்து மீள்விக்கப்பட்டது