பக்கம்:வார்த்தை வாசல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்காலம் சிறுகதைகள் பிறக்கும் காலம்.

எதுகைகளோ மோனைகளோ ஏது மின்றிப் பொய்க்கோலப் புதுக்கவிதை பிறக்கும் காலம்.

பொய்யோடு பொய்சேர்ந்து பழகும் நாளில், தக்கோலத் தழிழ்க்கவிஞர் மெய்ந்நூல் தந்தார். தமிழே.என் உயிரென்னும் இந்த நூலில் முக்காலச் சிந்தனையும் பகைவர் தம்மை

முறியடிக்கும் பாடல்களும் நிரம்ப உண்டு.

பூங்கொத்துப் புத்தகத்தில் முத்து முத்தாய்ப்

புதுப்பாடல் பலவற்றைக் கானு கின்றேன். மாங்கொத்தை வரவேற்க வாச லுண்டு.

மணிச்சரத்தை விலைகேட்கப் பெண்டி ருண்டு. வேங்கைப்பூப் போற்சிறந்த பாட்டுக் கூட்டம்

விளையாடும் இதுபோன்ற புத்த கத்தை வாங்கத்தான் நம்நாட்டில் ஆட்கள் இல்லை !

வரவேற்ருல் தமிழ்க்கவிஞன் வாடு வானே ?

கவிஞர் மூவேந்தன் அவர்கள் எழுதிய தமிழே என் உயிர்: என்னும் கவிதை நூலுக்கு 1966-ல் வழங்கிய அணிந்துரை.

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/20&oldid=645710" இலிருந்து மீள்விக்கப்பட்டது