பக்கம்:வார்த்தை வாசல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயலைப்போல், இசையைப்போல் இரண்டு நூல்கள்

இயற்றிய பின் இக்கவிஞர், கார்கா லத்து மயிலைப்போல், மயிலினது சாய லேப்போல்

மன்மதரா கங்களெனும் நூல் யாத் துள்ளார். கயல்விழியாள் ராதையவள் விழியின் வீச்சைக்

கண்ணபிரான் வாய்பேச்சைப் பதிவு செய்து, குயிலோசைக் கவிஞரிவர், தமிழில் கீத

கோவிந்தம் புதிதாகப் பாடி யுள்ளார்.

பாதரச வெளிச்சத்தில், சிறப்பு மிக்க

பளிங்குமணி மண்டபத்தில் ஒவ்வோர் நாளும். ராதைக்கும் கண்ணனுக்கும் லீலை. இன்ப

ரசலீலை. கொக்கோகக் குடும்ப வேலை. மர்தரசி மிஞ்சுவதும், கமலக் கண்ணன்

மங்கையிடம் கெஞ்சுவதும், சிறந்த காட்சி. ஆதலினல் அவ்வின்பக் காட்சி தன்னை

அற்புதமாய் இக்கவிஞர் வர்ணித் துள்ளார்.

பொன்னுக்கோர் பொட்டுவைத்து விடவா ? பூத்த, பூவுக்கோர் ஆடைகட்டி விடவா ? என்று * - மன்னு புகழ்ச் செல்வத்தை விட்டுச் சென்ற

மாயவநா தக்கவிஞன் கேள்வி கேட்டான். அன்னவனைப் போல்ராதை யிடத்தில் கண்ணன்

ஆனந்தக் கேள்விபல கேட்ப தாகக் கன்னிச்சிந் தாமணியாம் இந்த நூலில்

காதற்சிந் துக்கவிஞர் தெரிவிக் கின்ருர்.

63.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/65&oldid=645802" இலிருந்து மீள்விக்கப்பட்டது