உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாளும் கேடயமும் மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே! அருமை நண்பர் மாரிமுத்து அவர்களால் கொண்டு வரப்பட்டு - கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் கே. கே.டி.கே. தங்கமணி அவர்களால் வழிமொழியப்பெற்று-இந்த அவை யின் விவாதத்திற்கு உட்பட்ட கண்டனத் தீர்மானம் குறித்து இருபதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக் களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். - மாரிமுத்து அவர்கள் மெத்த பெருந்தன்மையோடு அவர்கள் கூறிய கருத்துக்கள் நம்மால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவைகளா அல்லவா என்ற நிலைமை இருந்தபோதிலும்- தன்னுடைய உரையை இங்கே நிகழ்த்தினார்! கே.டி.கே.தங்கமணி அவர்களும் மிக்க நிதானமாக இந்தக் கண்டனத் தீர்மானத்தில் தன்னுடைய கருத்துக்களை எடுத்துவைத்து -மாநில அரசின் மீது அவர் சாட்ட வேண்டிய குற்றங்கள் என்றாலும், அல்லது மத்திய அரசின் போக்கில் அவருக்குப் பிடிக்காத அம்சங்கள் இருந்தாலும், அவைகளை யும் மிக்க நிதானமாக எடுத்து விளக்கியிருக்கிறார்கள்! - கண்டனத் டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று அதற்கான மரபு கடைபிடிக்கப்பட்டு - இது போன்ற தீர்மானங்கள் வருவதற்கு எத்தனை உறுப்பினர்கள் எழுந்து நின்றார்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படைக்குத் ங்கள் உதவியதாகக் கூறி - ஆனால், கண்டனத் தீர்மானத் திற்கு மாறுபட்ட கருத்துக்களை நிறுவன காங்கிரசுக் கட்சியின் தலைவர் பொன்னப்ப நாடார் அவர்களும், நடு நிலையோடு தாங்கள் இந்தத் தீர்மானத்திலே இருக்கப் போவதாகச் சொல்லி-மிக உருக்கமான ஆனால் உண்மைகள் கோடிட்டுக் காட்டப்பட்ட வகையில் தங்களுடைய உரையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.