உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இது. மத்திய அரசு கொண்டுவர வேண்டியதாகும்; ஆகவே கண்டனத் தீர்மானம் அங்கே வர வேண்டும்; இங்கே கொண்டு வருவது பொருத்தமல்ல! தவறாகச் செயல்படுவோர்மீது நடவடிக்கை 1 பதினெட்டாவது அம்சமாக - "தொழிலில் முதலீடு செய்வதற்கான இப்போ துள்ள முறைகளைத் தளர்த்தி, இறக்குமதி லைசென்சைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் ” என்பதாகும். திலே கம்யூனிஸ்டுக் கட்சிக் கு ச் சில கருத்து வேறுபாடுகள் உண்டு என்பது எனக்குத் தெரியும் ; இருந்தாலும்கூட, இது, 'மத்திய அரசு எடுக்க வேண்டிய முயற்சி' என்பதை இந்த மாமன்றம் நன்கு உணரும் ; ஆகவே, திலும் தமிழ்நாடு அரசுக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை! தேசிய அனுமதிச் சீட்டு அளிக்கும் திட்டம் பத்தொன்பதாவது அம்சமாக- "சாலைப் போக்குவரத்துக்கான தேசிய அனுமதிச் சீட்டு அளிக்கும் திட்டம்” என்பதாகும். இதுபற்றித் தமிழ்நாடு அரசு 'மாநிலத்தின் உரிமைகள் பறிபோகாமல பார்த்துக்கொள்ளுங்கள்; இதை ஆகரிக் கிறோம்' என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறது; இப்போது, ஏகோ, '5 700 லாரிகளுக்குப் பெர்மிட்' என்று மெ த்தமாக அறிவித்திருக்கிறார்கள்; அதில், தமிழ் நாட்டிற்கு 200 என்று சொல்லியிருக்கிறார்கள்; இதுவ ையில் தமிழக அரசுக்கு எதுவும் உறுதியாக -திட்டவட்டமாகக் கிடைக்கவில்லை ; அது பற்றி அந்தத் துறை அமைச்சர்களெல்லாம் கலந்து பேசி முடிவெடுப்பார்களா எனைவோ -- தெரியவில்லை; இதுவும்

மத்திய அரசு செய்து முடிக்கவேண்டிய ஒரு காரியம்!