உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இருக்கிறது என்பதை எப்போதும் நான் உணர்ந் தவள். தங்கமணி:-"பிரதமரின் அறிவிப்பிற்குப் பிறகு இதற் காகப் பல மாநிலங்களில் அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களே அப்படி ஏன் தமிழகத்தில் - கொண்டு வரப்படவில்லை? அமைச்சர் இராசாராம்: அப்படிப்பட்ட அடிமைத் தொழிலாளர்கள் இங்கே இருக்கிறார்களா இல்லையா என்பதை அரசு ஆய்ந்தது; எந்த இடத்திலும் தமிழ கக்தில் இல்லாததாலும், நீலகிரியில் இருப்பார்கள் என்று அங்கேயும் மாவட்ட ஆட்சித் தலைவரைத் தொடர்பு கொண்டதில், அந்த இடத்திலும் அப்படிப் பட்ட நிலைமை கிடையாது என்பது தெரிந்ததால் அதற்கான சட்டம் கொண்டு வருவதற்கான சூழ் நிலை ஏற்படவில்லை.' சத்தியவாணிமுத்து:- 'நான் அமைச்சராக இருந்த போது. சேலம், கோவை மாவட்டங்களில் அப்படிப் பட்ட முறை இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கள் எனக்குத் தெரிவித்தார்கள். மு. சின்னசாமி:-"கோவை மாவட்டத்தில் அப்படிப் பட்ட முறையே கிடையாது. 99 அமைச்சர் இராசாராம்:'சேலம். கோவையில் எனக் குத் தெரியாத கிராமங்களே கிடையாது: அப்படிப் பட்ட விண்ணப்பம் எதுவும் அரசிடம் வரவில்லை.' ஹண்டே:-<¢ முன்னாள் அமைச்சரும்--இப்போதைய அமைச்சரும் இரண்டுவிதமான அபி பிராயங்களைச் செ ல்வதால், அதுபற்றிப் பூர்வாங்கமாக ஒரு . விசாரணை வைத்துவிடலாமே?' முதலமைச்சர்:- இது முடிந்துபோன பிரச்சினை; ந்த முறை இருந்தாலும்கூட, அதை ஒரேயடியாக அழித்து ஒழித்திடும் வகையில் இன்றைக்கு இந்திய அரசு ஓர் அவசரச் சட்டம் கொண்டுவந்து விட்ட தால் இப்போது பிரச்சினை அடிபட்டுப் போகிறது; நாம் அதனைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசிய மில்லை. $ 9