உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 அதுமட்டுமல்ல; சிறையில் வைத்திருக்கின்ற தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; நீங்கள் இதைச் செய்தாலொழிய அல்லது செய்கின்றவரைக்கும் சன நாயகம் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது! நீங்கள் இப்போது மக்களுக்குத் தரவேண்டிய பதில் எல்லாம், 'ஏன் இந்த நெருக்கடி நிலையையும்-அவசரச் சட்டத்தையும் நீடித்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்பதுதான் !" - அண்ணா வழியைப் பின்பற்றித்தான் அன்றைக்கு நருக்கடி நிலை பற்றி அவர் என்ன கருத்தைக் கொண்டிருந் தாரோ, அந்தக் கருத்தைப் பின்பற்றித்தான்-தி. மு. கழகச் செயற்குழு தீர்மானத்தை வடித்தெடுத்தது! உறவானவர்களாக கம்யூனிஸ்டுக் கட்சி 1964-ல் ஒரு கருத்தையும், 1975-இல் ஒரு கருத்தையும் கொள்ளலாம்; ஆனால் தி. மு. கழகத்தை, அரசியல் பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியாகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்த காரணத்தினால், 'நமக்கு இருந்தாலும் -- எதிர்க் கட்சியினராக இருந்தாலும் --நியாயங்களின் தன்மைகளைப் பார்த்து நம் முடைய கழகத்தின் கருத்துக்களைச் சொல்ல வேண்டும்' என்ற அரசியல் இலக்கணத்தின் அடிப்படையிலேதான் அண்ணா அவர்கள் அன்றைக்குச் சொன்ன அந்தக் கருத்தின் அடிப் படையிலே தான்-திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற் குழு, தன்னுடைய தீர்மானத்தை நிறைவேற்றியது! போர் வீரனுக்குத்தானே தெரியும் ? - - ஹண்டே பேசும்போது, 'செயற்குழுவிலே ஒரு தீர்மானம் -கடற்கரையிலே ஒரு தீர்மானம்- நெல்லையிலே ஒரு தீர் மானம்-ஏன் இப்படி ஒன்றோடொன் முரண்பாடு-ஏன் யின்வாங்கிப் போய்விட்டீர்கள்?' என்றெல்லாம் கேட்டார். என்று அவர் கேட்டது எப்படியிருந்தது என்றால், இன்னும் வேகமாக அல்லவா நீங்ள் போய் இருக்க வேண்டும் சொல்வது போல் இருந்தது ; அவரெல்லாம் இங்கே இருந்திருந்தால் அப்படிப்பட்ட யோனைகளை சொல்லி, 'இன்னும் வேகமாகச் செல்லுங்கள்' என்று கூறியிருப்பார்கள் போலும் லும்! அந்த அளவிற்கு, மத்திய அரசுமீது அவர்களுக்கு ஆத்திரம் இருக்கிறது!