உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 10 நெருக்கடி நிலையைக் கொண்டுவந்துவிட்டார்களே அதை எதிர்க்க வேண்டுமே -- முடியவில்லையே -- அப்படிப் பட்ட தலைமையின்கீழ் அகப்பட்டுக் கொண்டோமே பதைப்போல வருந்துகிறார்கள்........ என் ஹண்டே:-“ ஏற்கனவே பலமுறை நான் கலைஞர் அவர்களுடைய கற்பனையைப் பாராட்டியிருக் கிறேன்; அவருடைய கற்பனையைப் பாராட்டு வதற்கு இதன் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறாரே தவிர, அவர் சொன்னது முற்றிலும் மாறான கருத்து என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறேன். பெ. சீனிவாசன்:-"அண்ணா அவர்கள் ராஜ்ய சபையில் போய்ப் பேசியிருக்கிறார்கள்; நீங்கள் இந்த நெருக்கடி நிலை வந்த நேரத்தில், பொதுக்கூட்டத் திலும் - நிருபர்களிடமும்கூட கண்டித்தீர்கள்; இந்த அவை மூலம் உடனடியாக ஏன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி இருக்கக் கூடாது ? முதலமைச்சர்:- போர் வீரனுக்குத் தெரியும் 'எந்தக் கையில் வாள் வைப்பது -- எந்தக் கையில் கேடயம் வைப்பது' என்று!' தி. மு. க. தீர்மானத்தின் மைய அம்சம் - தலைவரவர்களே! திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுத் தீர்மானம் என்ன என்பதை இங்கு சொல்ல விரும்புகிறேன் : - 1. அவசரகாலப் பிரகடனத்தினைத் திரும்பப் பெற் றுக்கொள்ள வேண்டும். 2. நாட்டின் புகழ்மிக்க தியாகத் தலைவர்களை உட னடியாக விடுதலை செய்ய வேண்டும். 3. பத்திரிகையாளர்களின் கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்டு--பத்திரிகைகளுக்குரிய நியாய உரிமைகளைத் தடையின்றி வழங்க மான வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் எல்லாத் தீர்மானத்திலும் உள்ள மைய அம்சம் ; இப்போது, 'அம்சம்' என்றால்தான் எல்லோ ருக்கும் புரியும்!