உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 53 தமிழ்நாட்டு மக்கள், காந்தியடிகள் நெறியை மறவாமலும், சனநாயகச் சின்னமாம் அறிஞர் அண்ணா அவர்களின் பாதையிலிருந்து தவறாமலும், தங்களுக்கே உரிய தனிப் பண்பாட்டுடன் அமைதியான முறையில் -- வன்முறை தவிர்தத வழியில்--சட்டம், ஒழுங்குக்கு ஊறு நேராவண் ணம் நாட்டுக்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது." இதுதான் முதல் தீாமானம். - - காந்தியடிகள் வழி-அண்ணா அவர்களுடைய வழி தமிழர்களுக்குரிய தனிப் பண்பாடு - அமைதியான முறை சட்டம், ஒழுங்கிற்கு ஊறு நேராவண்ணம் நாட்டிற்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்- இதில் எந்த இடத்திலும் நாங்கள், 'கிளர்ச்சி செய்யப் போகிறோம்' என்று சொல்லவில்லை! செயற்குழு தீர்மானம் போட்டதும், நிருபர்கள் என்னைச் சந்தித்தார்கள் ;

அப்போது அவர்கள், இப்படி ஒரு

தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறீர்களே டெல்லியி லிருந்து வருகின்ற தாக்கீதுகளை நீங்கள் நிறைவேற்றுவீர் களா?' என்று கேட்டார்கள்! 70 “என்ன தாக்கீது' என்று கேட்டபோது. “சிலரைக் கைது செய்ய வேண்டும்-கள்ளக் கடத்தல்காரர், கடத்தல் காரர், சட்ட விரோதமான சங்கங்கள், அமைப்புகள் ஆகியவை களின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தாக்கீது களை அனுப்பினால் நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டார்கள். அப்போது நான் சொன்னேன் சொன்னேன்"செயற் ழு இந்தத் தீர்மானத்தைப் போட்டிருக்கிறதே அல்லாமல், இப்படிப் பட்ட தாக்கீதுகள் டெல்லியிலிருந்து வந்தால் அதை நிறை வேற்ற வேண்டாம்' என்று எனக்குச் சொல்லவில்லை” என்று தான் சொன்னேன்; அதுவும் பத்திரிகையில் வந்திருக்கிறது அப்படி இந்த இரண்டு மூன்று மாத காலங்களில் டெல்லியினுடைய தாக்கீதுகள்- இந்த அவசரச் சட்டத்தின் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் என்ற முறையில்- இந்த அரசின் சார்பில் கடத்தல் பேர்வழிகளைக் கைது செய்வதாக இருந்தாலும், 'போசா', 'மீசா' சட்டங் களைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், 'சில கட்சிகள் தடைப்படுத்தப்பட வேண்டும் அவைகளின் கிளைகள் இங்கே இருந்தால் தடைப்படுத்த வேண்டும்' என்று வந்தாலும், --