பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் 85 தத்தி மொழிபேசும் தமிழ்மாதே. ஆமாகில் இத்தரையில் வெண்பாவை இசைத்தனளே அம்மானை இசைத்ததுவும் நல்லுரை வெண்பாவோ அம்மானை. இவர் தமிழைத் தமிழ்த் தாயாக உருவகம் செய்து பாடியிருப்பது அற்புத மாக உளளது. கலையாகிக் கருத்தாகி ஒலியாகி எழுத்தாகிக் கவியு மாகித் தலையாகி அகமாகிப் புறமாகித் தவமாய குறளு மாகி நிலையாகிச் சிலம்பாகிக் கதையாகி நினைவிலுறு துதியு மாகிச் சிலையாகி அறமாகி ஒளிர்கின்ற தமிழ்த்தாய்இங்ங்னமே தமிழ்மொழியாள் என்ற தலைப்பிலும் பேராள நூல்பலவும் பிறப்பிப் பாளைப் பிறங்குபுகழ் வானகத்தே கவிஞர்க் கென்றும் வாராத நற்செல்வம் வழங்கு வாளை வளமார்ந்த வாசகமாம் குறளே ஆகித் தீராத நோய்பலவும் தெளிவிப் பாளைச் சிந்தையுளே தித்திக்கும் செந்தேன் ஆய சீராளை வாழ்வுண்மை செப்பு வாளைச் செந்தமிழாம் மொழியாள். என்று தமிழைத் தமிழ் மொழியாள் என்று உருவகித்துள்ளார். தமிழாயிரம்' என்ற தலைப்பில் கும்மி, தாலாட்டு, பள்ளு, பழமொழி, அகம், புறம், தேவாரம் என்று பட்டியலிட்டுக் காட்டித் தமிழாயிரத்தைப் பாடிப் புகழ்ந்து மகிழ்கின்றார். ஊனுருக்கி என்புருக்கி உலப்பிலா ஆனந்தத் தேன்பெருக்கும் வாசகமாம் தெள்ளுதமிழ் ஆயிரமே தரணியெலாம் வீரத்தால் தானாளும் மன்னவர்க்குப் பரணிபல பாடுகின்ற பண்தமிழும் ஆயிரமே புத்தொளியாய்ப் பொன்னொளியாய்ப் பூவொளியாய்த்தெய்விகமாம் முத்தொளியாய் முகிழ்த்ததமிழ் ஆயிரம்நூ றாயிரமே.