பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தைசாமி 103 என்று கூறும் கவிஞர் தன் நெஞ்சில் இருளிடை மின்னல் தோன்றுவது போன்று ஏதோ எண்ணம் தோன்ற அதன் எழுச்சியால் பாடுவதாகப் பகர்கின்றார். இவர் பாடும் பாக்கள் யாவும் அவலம் நின்று அழுத்தும் காலை ஆறுதல் தருவாள்' என்ற மன இறுக்கத்தால் வெளி வந்தவையேயாகும். பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை என்று குறிக்கத்தக்க இயல்புகள் காணப் பெறினும்,அவர்களினும் மிகு வளர்ச்சி அதிகமாக ஏற்பட்டு விட்டதால் இன்றைய காலப் பகுதியை எதிரொலிக்கும் பாங்கில் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும். மானுடத்திற்கும் இன்றியமையாத தமிழ்ப்பெருங் கவிஞராகி விடுகின்றார். இவருடைய கவிதைகள் தமிழுலகில் படிப்படியாக அறிமுகமாகிக் கொண்டு வருகின்றன. இவை தமிழுலகத்தில் இவருக்கு ஓர் ஒப்பற்ற நிலையான இடத்தைத் தேடித்தரும் என்று உறுதியாக நம்பலாம். தொடக்கக் காலத்தில் தாம் சுவைத்த தமிழ்ச்சுவையைத் தமிழர் அல்லாத பிறரும் நுகர வேண்டும் என்று கூறுவார். இன்பத் தமிழ்அலவோ - எம தெண்ணப்பெருவெளி தன்னில் ஒளிர்கிற அன்புக் கடல்அடடா - தேறல் ஆறாய்ப் பெருகிக் கரைபுரள் காட்சிகாண் மன்பதைத் தோழர்களே - ஒடி வாரீர் தெவிட்டாது வாரிப் பருகுவோம் என்ற கவிதையில் (1947 தமிழ் இன்பக் கடலிற் புகுந்து தாம் கண்ட சுவையை, அதுவும் புதிய சுவையைப் பிறரும் பெற வேண்டும் என்ற கவிஞரின் ஆர்வத்துடிப்பைக் காண முடிகிறது. நாளும் வருமோ (1953) என்ற கவிதையில் ஒருவித ஏக்கத்தைக் காண்கின்றோம். சங்கம் கூட்டி உண்மை ஆய்ந்த தமிழர் வாழ்வின் தகைமை இடையில் மங்க நேர்ந்த கொடுமை எண்ணி வாடும் நெஞ்சே! வளமும் கனவும் பொங்க மீண்டும் தமிழர் பண்பைப் புகழின் மிஞ்சி முதன்மை வாய்க்கும் தங்க வாழ்வர் என்ற செய்தி தரணி பேசும் நாளும் வருமோ SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASஎங்கள் அன்னை அமுதத் தமிழின் செல்வம் அவனி விழையும் நாளும் வருமோ