பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 வாழும் கவிஞர்கள் இந்திரன் சசியைப் பெற்றான் இருமூன்று வதனத் தோன்தன் தந்தையும் உமையைப் பெற்றான் தாமரைச் செங்க ணானும் செந்திரு மகளைப் பெற்றான் என்று கூறுவான். இந்திரனுக்குச்சசியால் பெருமை.சிவனுக்கு உமையால் பெருமை. நான்முகனுக்குக் கலைமகளால் பெருமை. அவர்தம் துணைவியரை எங்கு வைத்துள்ளனர் என்பதை, - பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத் திருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் என்று கூறுவான். சிவன் தன் துணைவியை இடப்பக்கத்தில் வைத்து. தையல் பாகன் என்ற பெயர் பெற்றான்.திருமால்பெரிய பிராட்டியாரைத் தன்மார்பில் வைத்துக் கொண்டான். நான்முகன் சரசுவதியை நாவில் வைத்தான். இவற்றால் பெண்ணின் பெருமை பேசப் பெறுகின்றன. இக்காலத்தில் ஒருவர் தம் மனைவிக்கு அதிக மதிப்புக் கொடுத்தால் அவரை. பொண்டாட்டியைத் தலையில்துக்கி வைத்திருக்கின்றார் என்று கிண்டல் செய்கின்றது. கவிஞர் குலோத்துங்கன் பெண்ணியம் பற்றிப் பல பாடல்கள் படைத்துள்ளார். "நினைந்து நினைந்து" என்ற தலைப்பில் ஒரு கவிதை, பெண்மை எனப்படும் காவியம்-புவி டேனும் வலிமையின் பெட்டகம் உண்மை எனக்கிது காட்டினை-எனை உம்பரின் விஞ்ச உயர்த்தினை அற்புதமான கவிதை, தனக்கு உள்ளொளி காட்டியதைக் கண்டு வியக்கின்றார். அனைத்தும் பெண்மை. என்ற தலைப்பில் காலமெலாம் பாடியதும் காவி யங்கள் கருப்பொருளாய்க் கொண்டதுவும் கலைகட் கெல்லாம் மூலமென நின்றதுவும், உயிர்தொட் டீர்க்கும் மூரல்மலர் மென்மையடா தொன்று தொட்டுத் தேடுமொரு புதையலட தெளியும் தோறும் தீராத புதுமையடா. செம்மை எல்லாம் கூடுமொரு சங்கமம் நம் உயிரும் ஊனும்