பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வு நோக்கில் வாழும் கவிஞர்களின் கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகக் கல்விப் பேரவைக் கூட்டத்திற்கு 1997 மார்ச்சு திங்களில் மதுரைக்கு வந்த போது காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர், பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள். ' எங்கள் கல்லூரி நிருவாகம் டாக்டர். ரெ. முத்துக் கணேசனாரின் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் (1998 நிகழ்த்துவதற்குத் தங்கள் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளது. விரைவில் அழைப்புவரும் என்ற செய்தியைத் தெரிவித்தார். மகிழ்ந்தேன் . டாக்டர் ரெ. மு.அறக்கட்டளைச் சொற்பொழிவு என்பதால் என் மகிழ்ச்சி இரண்டு மடங்கு பெருகியது. காரணம். காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர் பணியை ஏற்றுக் கொண்ட பிறகு ஜூலை 5.1950, காரைக்குடி வந்ததும் முதலில் பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு ஒரு வார காலத்தில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் போன்ற சிலரைச் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். அச்சிலருள் ஒருவர் டாக்டர் ரெ. முத்துக் கணேசனார் ஆவார். அன்று முதல் இன்று வரை சுமார் 48 ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்ந்து நிலைபெற்ற வண்ணம் உள்ளது.

பேராசிரியர், தெ. முருகசாமிக்கு உடனே திறனாய்வு நோக்கில் வாழும் கவிஞர்களின் கவிதைகள் என்ற பொருளில் "வாழும் கவிஞர்கள்" என்ற தலைப்பைக் குறித்து எழுதினேன். என்னுடன் பழகி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சில கவிஞர்களின் கவிதைகளைப் பற்றிச் சிந்திக்கலாமே என்று கருதி இத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதில் மரபுக் கவிஞர்கள் பதினாறு பேரும், புதுக் கவிஞர்கள் எண்மரும் அடங்குவர். இவர்கள் செட்டி நாட்டிலும் பிற இடங்களிலும் என்னால் அறியப்பட்டவர்கள் ஆவர் . இன்னும் நானறியாதவர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களை நான் என்ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. நான் அறிந்தவர்கள் என்னால் எளிதில் தொடர்பு கொண்டும் நூல்களைப் பெறவும் முடிந்தவர்கள் மட்டிலும் தான் என் ஆய்வுக்கு உட்படுத்தப் பெற்றுள்ளனர். இவர்களை அல்லாது பிறரை என்னைப்போல் வேறு சிலர் ஆயலாம் . எனக்கும் வாய்ப்புக் கிடைக்குங்கால் நூல்களை ஆய்வேன். எனவே வாழும் கவிஞர்களைப்