பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. திருமுருகன் #35 தனது எழுத்தைப் பிறமொழி தன்னில் தறுக்குடன் கிறுக்கிடும் காலம் தனது பிள்ளைக்குப் பிறமொழிப் பெயரைச் சார்த்தியே மகிழ்ந்திடும் காலம் தனது தாய்மொழியைத் தாழ்த்துவேசன் தன்னைத் தாங்குவோர் உயர்ந்திடும் காலம் இனிதுநம் தமிழென்று இயம்பியே நம்மேல் இன்னொன்றைத் திணித்திடும் காலம். "ஜூனியர் போஸ்டு" எனத்தமிழ் இதழுக்குப் பெயர்தனைச் சூட்டிடும் காலம் தான்.அதில் "லைட்ஸ்ஆன் கவர்ஸ்டோரி என்ற தலைப்பினில் எழுதிடும் காலம் தேன்னை இனிக்கும் நன்றி யை மறந்து தேங்கஸ் என மொழிந்திடும் காலம் மாணமே இன்றி "மம்மி" "டாடி" என்று மழலையைப் பயிற்றிடும் காலம். பூக்களைப் புஷ்பம் என்பதில் மகிழ்வோர் புதுக்கவி படைத்திடும் காலம் காக்கைகள் கரையக் குயில்லைாம் எங்கோ, கரந்தயர்த் துறைத்திடும் காலம் என்று தனது வருத்தத்தைத் தெரிவிக்கின்றார். தமிழ் முருகனும் இந்த நிலையை மாற்ற முடியாது. டாக்டர் திருமுருகனும் இந்த நிலையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆங்கிலேயர் நாட்டை விட்டுச் சென்று ஐம்பது ஆண்டுகள் உருண்டோடின. கடந்த முப்பதாண்டு காலமாக நம்மவர் விருப்பத்திற்கிணங்க ஆங்கிலப் பள்ளிகள் தோன்றி வருகின்றன. தமிழாசிரியர்கள் மட்டுமே ஒரு சிறு கூட்டம் இதனைக் குறை கூறி வருகின்றனர். கவலை வேண்டா, நீராலும் நெருப்பாலும் அழிக்க முடியாத தமிழை யாராலும் அழிக்க முடியாது. தன்னேரில்லாத தமிழன்னைக்குத் தன்னைக் காத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு. 2. பல்கவைத் தலைப்புகள் டாக்டர் இரா. திருமுருகன் படைத்த பலசுவைப் பாடல்கள் பல உள. அவற்றை இத்தலைப்பில் காட்ட விரும்புகின்றேன். கற்பதில் ஆர்வம், சாந்துணையும் கல்லாதவாறு ஏன்? என்ற வினா எழுப்பினார் வள்ளுவர் குறள் 397). கவிஞர் அதற்கு விடையாக அமைகின்றார். பாடை ஏறினும் என்ற தலைப்பில் காணப்படும் பாடல்