பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கவிஞர் ஆ. பழநி இக்கவிஞர் காரைக்குடியில் காட்டுத் தலைவாசல் என்ற பகுதியில் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் (1931), ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தவர். ஐந்து வகுப்புவரை படித்து. வட்டிக் கடை இரண்டாண்டுகள் துணிக்கடை இரண்டாண்டுகள் பெட்ரோல் விற்பனை நிலையம் இரண்டாண்டுகள் பல்பொருள் அங்காடி'ஓராண்டு வேளாண்மை எட்டாண்டுகள் என்று இப்படி வாழ்க்கை நடத்த விதி வகுத்த வகையில் சிக்கியவரை அதே விதி கண்டது கற்கும் தொழிலிலும் கற்றவற்றைச் சிந்திக்கும் பாங்கிலும் ஈடுபடுத்தியது. படித்த ஏடுகள் திராவிட நாடு, போர்வாள். திராவிடம், முரசொலி, தென்றல் ஆகியவை. இவை இந்த இளைஞரின் அறிவைக் கூர்மையாக்கின. மேலைச் சிவபுரிக்கு வழிகாட்டியது. முறையாகத் தமிழ் பயின்று வருங்கால் மீண்டும் விதியின் சதி, குடல்வால் அழற்சி நோய்க் கொடுமை, தொடர்ந்து அறுவை சிகிச்சை, தலைவலி போய்த் திருகுவலி வந்ததுபோல் நுரையீரல் கட்டிதோன்றியது.கட்டியை அகற்றும் பணியில் ஒரு பக்க நுரையீரலையே பறிகொடுத்த நிலை. இந்தக் கோளாறுகள் எல்லாம் விளைந்த காலம். இவர் புலவர் தேர்வு எழுத வேண்டிய இறுதியாண்டில் (1959) இவற்றால் தேர்வு எழுத முடியாமல் மூன்றாண்டிற்குப் பின் 1982 தேர்வு எழுதி வெற்றி பெற்றது. இது இறைவனது திருவருள். தமிழன்னை பெற்ற தவப்பயன். தீதும் நன்றும் பிறர்தர வாரா' முறைவழிப்படும் ஆருயிர். நெற்பயிரை வளர்த்த கையை சொற்பயிரை வளர்க்க ஆற்றுப்படுத்தியது ஊழ். சாதாரணமாகக் குடும்பச் சூழ்நிலையும் நிதிப்பற்றாக்குறையும்தான் இளமைக் கல்விக்கு யமனாக இருப்பவை. ஆனால் இவர் வாழ்வில் நோய் எமனாகத் தோன்றி ஊழ்வலியால் விடுபட்டுப் போயிற்று. கருவிலேதிருவுடைய இந்த இளைஞர்க்கு மாணவப் பயிரை வளர்க்கவும், கவிதைப் பயிரை வளர்க்கவும், காரைக்குடி மீசு உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் பதவியை நல்கியது (1964), செட்டிநாட்டில் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகத் திகழவும் ஆகூழ் இவருக்குத் துணை செய்தது. -