பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 భీ!Good கவிஞர்கள் § அடியேன் 1950-60 வரை அழகப்பர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில்பணியாற்றி 60ல் திருப்பதிசென்று விட்டாலும், என் குடும்பம் 1966 வரை சிறுவர்களின் கல்விநிமித்தம் காரைக்குடி 8ಷ್ಟು §ಸ್ತ್ರ விடுமுறைக் காலங்களில் காரைக்குடியில் தான இருந்தேன். அப்பொழுதெல்லாம் கவிஞர் முடியரசனையும், புலவர் பழநியையும் இரட்டையர் போல் காட்சிதரக் காண்பேன். கண்டு உசாவி உரையாடி மகிழ்வதும் உண்டு. அப்பொழுதே முடியரசன் பெருங்கவிஞர். புலவா பழநி கவிதை உலகில் ஒரு கற்றுக் குட்டி, அவர்கள் இருவரும் துரோனர்-அருச்சுனன் போல் காட்சி தந்ததை இப்போது நினைவு கூர்கின்றேன். அன்று கற்றுக் குட்டியாக இருந்த புலவர் பழநியை இன்று மாபெருங் கவிஞராக மலர்ந்த நிலையில் கண்டு மகிழ்கின்றேன். இவர் ஒரு மரபுவழி முகிழ்த்த கவிஞர். யாப்பு வழுவாது பாடுபவர். அகவல், கலிவெண்பா, அறுசீர், எண்சீர் விருத்தங்கள் ஆகியன இவர்தம் கலைவண்ணப் படைப்புக்களைக் கவின்பெறச் சிறப்புடன் காட்டுகின்றன. அண்ச்ச அடி, சாலி மைந்தன் போன்ற செய்யுள் நாடகக் காப்பியங்கள் ஆசிரியரே அடியேனுக்கு அன்பளிப்பாக நல்கியவை. அவ்வப்பொழுதே படித்து மகிழ்ந்து பாவலர்மணி பழநியின் கவிதைத் திறனையும் . முற்போக்குச் சிந்தனைகளையும் அறிந்து மகிழ்ந்துள்ளேன். இவர்தம் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு படித்தேனாக இனிக்கின்றது. தமிழ்ப் புலமை சுடர்விட்டு ஒளிர்கின்றது. சொல்வளம் கவையுணர்வை ஊட்டுகின்றது. தமிழன்னை இவர்தம் பெருமையை உணர்ந்து உணர்ந்து மகிழ்வாள் என்று எண்ணுவதற்கு ஐயமில்லை. உவமைகளின் தனித்தன்மை, உருவகங்களில் புது விளக்கங்கள், சொற்களில் மிளகு மிட்டாய்ச்சுவை, சமுதாய நிலை இவை படிப்போரின் நெஞ்சில் நிலைத்து நிற்கும். பகுத்தறிவுச் சிந்தனைகள் கவிதைகளில் இலைமறை காய்களாக நின்று கனிந்து படிப்போரின் உள்ளத்தையும் கனிவிக்கும். சில சமயம் இவர்தம் உரைநடை கூடக் கவிதைப் பாங்கில் இனிக்கும். பெரிய குளத்தில் பிறந்த கவிஞர் முடியரசனைக் குறிப்பிடும் போது இலக்கியச் சாறு பருகும் பழக்கம் இளமையிலேயே இவருக்குக் கிட்டிற்று. அஃது இந்தக் கவிதை மீனுக்குப் பெரியகுளத்தை நல்ல நீச்சற் குளமாக ஆக்கிற்று முடியரசனை, கவிதை மீனாகவும் பெரிய குளத்தை நீர் கொண்ட குளமாகவும் உருவகித்துக் காட்டுவது அற்புதம்.