பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஆ. பழநி 45% "திருக்குறள் என் காதலி" என்ற கவிதை இருபத்தொன்பது ஆண்டுகட்கு முன்னர் பாடப் பெற்றது. இது முழுமையான உருவகக் கவிதை. இது படிப்போரிடம் முழுமையான கவிதை இன்பத்தை விளைவிப்பது கவிஞர் வாக்கில் இது, வள்ளுவர்செய் திருக்குறளாம் இனிய பெண்ணை வளர்கின்ற நூலகமனம் காவிற் கண்டேன் உள்ளுருகி தின்றதுவும் அவள்த லத்தை உண்டுகவை புற்றதுவும், மணமு டித்து விள்ளிய இல்லறத்தில் షెవ్లు ರ್ಫಾಕ್ಷೆ -- விரும்புகின்ற கல்வியினால் பிரித்து சென்று கள்ளொழுகும் மலர்க்குழலை மீண்டும் கூடிக் களித்ததுவும் . என்று உருவகித்துப் பாடப் பட்டதாகக் கூறப் பெறுகின்றது. அப்பெண்மணியின் நலன்களைப் பற்றி, முத்திருக்கும் அவள்வாயில், இதழி ரண்டும் முறுவலித்த படியிருக்கும், கண்ணே மீனை ஒத்திருக்கும் என்றாலும் காண்டனர் உள்ளில் ஊடுருவித் தைத்திருக்கும், குழலிற் பூவின் கொத்திருக்கும், காளையர்தம் நெஞ்ச மெல்லாம் குடியிருக்கும் படியிருக்கும், தோற்றங் கண்டு மத்திருக்கும் தயிர்போலக் கலக்க முற்று மறுகிருக்கும் படியழகு மலிந்தி ருக்கும் என்பது ஒரு பாடல் படித்துப் படித்து இன்புறலாம். "ஆற்றுப்படை என்பது ஓர் அற்புதமான கவிதை,நகைச்சுவைக் களஞ்சியம், படிப்பவர் வயிறு வெடிக்கச்சிரிக்க வேண்டும். சிரிப்பு,உடல் நலத்திற்கு ஓர் அற்புதமான மருந்தல்லவா? தமிழ்ச் சங்கத்திற்கு நம்மை ஆற்றுப் படுத்தும் போக்கில் அமைந்தது. பத்துப் பாட்டில் காணப் பெறும் ஆற்றுப்படைகளின் பாணியில் அமைந்தது. கல்லுக் கட்டி' என்ற இடத்தில் ஒரு வழிப்பாதையில் போகுமாறு ஆற்றுப்படுத்துகின்றார் கவிஞர் வழியில் ஒரு வாய்ச் சண்டை எது பற்றி? முன்னணி நடிகையின் முதற்குழந்தைக் கார்தகப்டன் என்பதே ஆங்கிருக்கும் இளைஞர்களின் ஆராய்ச்சி காதுகளைப் பொத்திக் கொண்டு கவனமாக நடந்தால் பாதையில் ஓர் அழகான ஒவியத்தைக் காணலாம் என்கின்றார். அஃது என்ன ஒவியம்?