பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஆ. பழநி, 453 இது மேற்குக் கல்லுக்கட்டிக் காட்சிகள், வடக்குக் கல்லுக் கட்டியில் 1. விளம்பரத்தைக் கண்டு கல்போல் நிற்கும் ஆட்களை 'குற்றியா? மகனா? என்று அறியாது குழம்பிப் பெற்றங்கள் உரசும் காட்சி 2. பழக்கடையில் அழுகல் பழத்தைத் துக்கி எறியும் போது எருதும் பன்றியும் முட்டி மோதிப் போராடி அதைக் கொள்ள முயலும் காட்சி 3. வாழைப்பழத்தோலில் சறுக்கி விளையாடும் பனிக்கட்டி விளையாட்டு. 14 ஒருவழிப் பாதையில் மிதிவண்டி மீது எதிரில் வரும் காவலரின் மிதி வண்டி மோதும் காட்சி. இந் நான்கு காட்சிகள் பற்றிக் கூறும். இருப்பதை வைத்தே எதையும் முடிப்பதுதான் பொறுப்புள்ள தேசியம் என்று புலங்கொள்வி: என்ற கவிதையடிகளில் கவிஞரின் எள்ளல் தொனியைக் கண்டு மகிழலாம். கிழக்குக் கல்லுக்கட்டியில் t வாருங்கள், வாருங்கள் என்றே வரவேற்றுப் பாருங்கள், பாருங்கள் என்று துணிபரப்பும் அறுவைக் கடைக்காரரின் அறுவைப் பேச்சு 2 கொப்புடைய நாயகி திருக்கோயில் கோபுரம். இத்திருக் கோயிலில் வடமொழி மந்திரத்தை உதறி, காசு பறிக்கும் குருக்களின் காட்சி. அடுத்துக் காண்பது காலத்தைப் போற்று எனக் காட்டும் மணிக் கூண்டு. சந்நிதித் தெருவில் தங்கநகைக் கடையில் காணும் காண்டிகை, விருத்தி, உரைகள். இவை நகைக்கடைக்காரர் புரியும் தில்லு முல்லுகள், உரைக்கும் பொன்துகள்களை மெழுகில் ஒற்றிக் கொள்வார்கள். நான் காரைக்குடியில் வாழ்ந்த போது சில நகைக் கடைக்காரர்களோடு நெருங்கிப் பழகியதுண்டு. புதுக் கணக்கு போடும் ஒரு கடைக்குப் போயிருந்தேன். அங்கு இரண்டு மெழுகு உருண்டைகளைப் பார்த்தேன். அவற்றின் விவரம் கேட்டதற்குச் செட்டியார் வேடிக்கையாக ஓர் உருண்டையைக் காட்டி இதில் சேர்வது என் முதல் திருமகள் திருமணத்திற்குப் போதும் ' என்றும், மற்றோர் உருண்டையை எடுத்துக் காட்டி இதில் சேர்வது என் இரண்டாம் மகள் திருமணத்திற்குப்போதும் என்றும் கூறினார்.