பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு. ஜகநாதராஜ: 475 f §

கேள்வி என்ற தலைப்பில் கவிஞர் பல வினாக்களை விடுத்துப் புத்தகத்தை மூடிவிட்டுச் சிந்தித்து விடை டகருமாறு வேண்டுகின்றார். 1. முட்டை முதலா? பெட்டை முதலா? 2. விதை முதலா? செடி முதலா? 3. விண் முதலா? மண் முதலா? 4. பெண் முதலா? ஆண் முதலா? 5. பிறை முதலா? மதி முதல? 6. கண் முதலா? கருத்து முதலன? 7. கடல் முதலா? கார் முதலா? 8. உடல் முதலா? உயிர் முதலா? இந்த வினாக்களுக்கும் விடை பகர்ந்தால், தாம் கடவுள் உண்டு இல்லை என்ற விடுகதைக்குத் துணிவான கருத்தினைக் கூறுவதாகச் சவால் விடுகின்றார். மேலும் இந்தக் கரையில் சத்தியத்தின் நித்தியத்தைச் சாற்ற வந்த சான்றோர்களாக அறிவியலறிஞர்களைக் காண்கின்றார். பொருளே சத்தியம் என்று பொருள் முதல்வாதியும், கருத்தேசத்தியம் என்று கருத்து முதல் வாதியும் நீண்டதோர் தத்துவவாதம் நிகழ்த்துவதைக் காண்கின்றோம். இருவர் வாதங்களையும் கேட்ட சியாத்வாதி கூறும் முடிவுகள் அறிவுக்கு நல்ல விருந்தாகின்றது. ஒருநா னயத்தின் இருபக்கம் ஒப்பக்கிடக்கும் பொருள்கருத்தை ஒன்றே பெரிதென் றுழல்வரனேன் உயிரும் உடலும் கலத்தன்றோ ! தருமிவ் வாழ்க்கை அமைந்துளது தனித்துக் கிடந்தால் சரியாமோ? தரணி வாழ்க்கை இருநெறியும் சத்தி யத்தின் கூறுகளாம்! உண்மை பலகோ னங்களிலே ஒவ்வொரு விதமாய்த் தோன்றிடுமே ஒருபனித் துளியில் பன்னிறமும் உருவா யிருத்தல் அறியோமோ !