பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##4 வாழும் கவிஞர்கள் சேற்றுமண்ணைத் துவைத்துப் பிசைந்து சிதைத்துப் பின்னே கலம்செய்தல்போல் ஊற்றெடுக்கும் உணர்ச்சிச் சுழலில் உருக்கு லைந்தே உள்ளொளி பெறுவேன்! தீன னாகி யானெனும் முனைப்பில் శAళ.జఙ? గళి: : க்கம் டோே திசைதடு மாறித் திகைக்கும் போதே rோன மான வான வெளியில் முளைக்கும் துருவம் தென்படு மம்மா! என்பவற்றில் இந்நம்பிக்கையைக் கண்டு மகிழலாம். அறிவியல் கரையிலிருந்து பல நல்ல காட்சிகளைக் காட்ட முயல்கின்றேன். இங்கு ஏவாள் உலகு என்னும் புதிரை அவிழ்க்க முயன்று அறிவுக் கனியைப் பறித்து உண்ட ஏவாள் பொய்கலந்த இருள்நீக்கிப் புத்தொளியைத் தத்தெமக்குப் புலன்தந்த தெய்வீகப் பொற்கொடி ஆவதைக் கவிஞர் காட்டக் காண்கின்றோம். அன்று ஏடன் என்னும் அழகிய பூங்காவில் ஆதாமின் சொல் மீறி இறைவனால் தவிர்த்திட்ட இன்தருவின் மென்கனியைச் சுவைத்திராவிட்டால் மனிதன் இழி விலங்காய்க் கிடப்பான். நாணமில்லா மனிதற்கு நல்லறிவுப் பழச்சுவை நாவினிக்கத் தரப்பெற்றதனால், இன்று மனிதன் நாகரிகம் கொண்டவனாய்த் திகழ்கின்றான். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்த கவிஞர் ராஜா, பூகண்ட வண்டொலிப்பப் புதுத்துறைகள் ஆய்ந்ததுவும் போற்றுகின்ற மின்சாரம் பூவுலகில் பெற்றதுவும் நீகண்ட பகுத்தறிவு நீள்கணியின் பயனன்றோ? நினையென்றும் வாழ்த்துகின்றேன் நீடுழி வாழியரோ என்ற பாடலில் வாழ்த்தி மகிழ்கின்றார். தெய்வத்தின் கட்டளையைத் தெம்பாக மீறியவள் தீமைதனைத் தந்தாள்என் றுமையர்கள் சொல்லட்டும் அதைப்பற்றி எவரும் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று நவில்கின்றார். கவிஞர் விவிலியத்தின் மாற்றுக் கருத்தினைநல்கி மக்களிடையே நிலவிவரும் பத்தாம் பசலித் தனத்தை நேரல் முறையில் சாடுகின்றார்.