பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகு, ஜகந்நாதராஜக $73 வானவில்தான்மறைத்தாலும் மழைமுகில்கள் சிதைந்தாலும் நானெனது உள்ளத்தில் தாள்தோறும் காண்கின்றேன் அற்புதமான கற்பனைகளை ஈண்டுக் காண்கின்றோம். அறவியல் கரையிலிருந்து சிலவற்றைக் காண்போம். இங்குள்ள ب: fr: பாடல்கள் மூலம் புத்தர் பெருமானையும், சாக்ரடிசையும், நபிகள் நாயகத்தையும், காரல் மார்க்லையும், காந்தியையும் கொன்றொழித்த உலகின் மடமையைக் கண்டு வருந்துகின்றோம். தேவாம்சம் பொருத்தியதற் செம்மல்களை நீதிநெறி தெரியக் காட்டி மூவன்த புகழடைந்த ஏத்தல்களைக் கொன்றொழிக்கும் மூட உலகே என்று தம் வெறுப்பைக் காட்டுகின்றார். பித்தேறித் தமக்குள்ளே பேதம் பேசிப் பிழைபட்டுப் போகின்ற மதங்கள் என்றாலும் அவற்றினுள்ளும் சத்தாய பேருண்மை ஒன்றைக் காண்கின்றோம். அந்த உண்மை என்ன? ஒத்துரிமை யோடித்த உலகோ செல்லசம் ஒழுக்கமுடன் அன்டறங்கள் ஓம்பிக் காத்து தித்தியமாம் பரம்பொருளை நினைத்து வாழ்த்தி நீதியுடன் வாழவேண்டும் என்றே சொல்லும் உண்மையைத்தான் கவிஞர் வாக்கில் காண்கின்றோம். "ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி" என்று பெரியோர்கள் சான்றோர்கள் இரண்டையும் விரும்புவார்கள், கவிஞர் தாம் இவ்விருமுனைகளின் ஈர்ப்பால் துன்புறுவதை, பருந்தும் தவளையும்போல் பாழ்மனமும் உடலுணர்வும் இருந்தென்னை அலைக்கழித்தே எதிரெதிராம் திசைகளிலே விருந்துக்கே அழைக்கிறது வேட்கைப் பெருநெருப்போ அருந்தென்று துண்டுவதால் ஆர்பக்கம் சேர்வதுவோ? ஆன்மிகப் போராட்டமாக எடுத்துரைக்கின்றார். ஆயினும் துருவ மீன் தென்படும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளார்