பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கு. ஜகந்நாதராஜா 17. 7 f அவமான வெடிகுண்டும் அணுகுண்டும் அழியட்டும் தவமான மெய்ஞ்ஞானம் தழைக்கட்டும் தழைக்கட்டும் அன்புதான் உலகை ஆளும் ஆற்றல் பெற்றது என்பது கவிஞர் ராஜாவின் அதிராத நம்பிக்கை, இனமொழி பேதங்கள் இல்லாமல் எந்த உயிரையும் கொல்லாமல் மனமொழி செயல்களால் சத்தியத்தின் வழியில் நடப்போம் நித்தி:மே ஒவ்வொரு மனிதனின் உரிமைதனை ஒவ்வொரு மனிதனும் மதித்திட்டால் இவ்வவ னிதனிலே போருண்ட ? இன்னல் என்னும் வேருண்டோ? அன்பே உலகை ஆளுமடா அதிகார வெறிகள் மாளுமடா இன்பம் வேண்டும் மனிதகுலம் இன்றே திருந்த வேண்டுமடா என்ற பாடலில் கவிஞரின் நம்பிக்கையைக் கண்டு மகிழலாம். இக் கரையிலிருந்துகொண்டு அவர் உலகத் தலைவர்கட்கும் விண்ணப்பம் விடுப்பதையும் நம்மால் காண முடிகின்றது. உலகை இயக்கும் தலைவர்களே உங்கட் கென்றன் விண்ணப்பம் தலைமைப் பதவி தனைவி.இத் தரணி வாழ்தல் அவசியமாம் அணுகுண் டுகளைச் செய்யாதிர் அதற்காம் செலவு முழுவதையும் துணிவாய் உலகம் முழுமைக்கும் துன்பம் நீங்கச் செலவழிப்பீர்! பேசித் தீர்க்கும் பிரச்சினையைப் பெரிது பண்ணிக் குழப்பாதீர் நாசம் தவிர்க்க நீங்களெலாம் நல்ல மனது வைத்திடுவி ! பலவகை மொழிகள் பேசிடுவோர் பாங்காய் ஒருநாட் டிணைந்திருப்பப் பலவகை நாட்டார் அதுபோலப்