பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ வாழும் கவிஞர்கள் ஒளிப்புனலில் குளித்தெழுந்து வண்ணம் பூசி & உயர்மணத்தைக் காற்றினிலே கலக்க விட்டே ஒளிப்பேது மில்லாமல் இதழ்கள் நீக்கி உள்ளதெல்லாம் காட்டுகின்ற புதுமுகம் போல் ஒளிந்திருந்த சுவைத்தேனைத் திறந்து காட்டி ஓடிவரும் வண்டினத்துக் குணவு கூட்டிக் களிப்போடு காற்றோடு நடன மாடும் காட்சியினைத் தருவதுவும் மலரேயன்றோ? மலர்கள் மலர்ந்து அசைதலை அவை காற்றோடு களிப்போடு நடனமாடுவதாகக் கூறுவது கவிஞரின் நுண்ணுணர்வைக் காட்டுகின்றது. பலவகை மலர்களை இரண்டு பாக்களில் காட்டுகின்றார். கதிர்முகத்தை விரும்புகின்ற மலர்க ளுண்டு, காலையிலே அவனெழுந்து மேலே ஏறிக் கதிரொடுங்கி மாலையிலே மறையு மட்டும் . கழுத்தொடிய முகம்பார்க்கும் மலர்களுண்டு, மதிமுகத்தை விரும்புகின்ற பூக்க ளுண்டு, வட்டநில வான்பரப்பில் தோன்றி வந்தால் பொதிந்திருந்த மனம்சிந்தி மலர்ந்து காட்டும் புதுப்பொலிவு துமலர்கள் பலவு முண்டு. இவை ஒருவகை மலர்களாகும். கதிரவனை விரும்புகின்ற கமலம் வானில் கலைகூட்டி மதிகண்டு மலர்த லில்லை கதிர்கூட்டி ஒளிகூட்டி மயக்கி னாலும் கயத்தல்லி பகலவனுக் கலர்த லில்லை, இதுதானே தமிழொழுக்கம்,கொண்டான் கண்ணே இனிமையெனக் காண்பதல்லால் பிறரி டத்தே எதுநலமிக் கிருந்தாலும் தமிழ்ப்பெண் ணுள்ளம் ஏற்காதே அதையென்று மலர்கள் சொல்லும். இவை மற்றொரு வகை மலர்களாகும். இவ்வகை மலர்வழியாகத் தமிழ்ப் பெண்ணின் பண் பாட்டுள்ளத்தைப் பகர்வதாகக் கூறுவது கவிஞரை ஆங்கில கவிஞர் வொர்ட்ஸ்வெர்த் என்பவரிடம் கொண்டு வந்து நிறுத்துகின்றது. - பெண்ணையொரு மலரென்பார்,இனிமை சொட்டப் பேசும்வாய் மலரென்டார், வேலைப் போன்ற கண்ணையொரு மலரென்பார், தொட்டுப் பார்த்துக் கையையொரு மலரென்பார், பளிங்கு போன்ற