பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 வாழும் கவிஞர்கள் வாங்கியகை பூமணக்கும் இந்த நூலை வைத்தஇடம் தேன்மணக்கும் படித்து விட்டுத் துங்குகையில் திருமலையான் தென்றல் காற்று துளபத்தின் நறுமணத்தை நெஞ்சில் தேக்கும் ஆங்காங்கே அருள்மணக்கும் திவ்விய தேசம் அடைந்தபயன் அத்தனையும் நொடியில் கிட்டும் பூங்குயிலாய் ஆசானின் புகழைப் பாடும் பொற்பேறு மாணவன்என் பிறவிப் பேறே. என்ற பாடல்கள் அமைகின்றன. அத்தனைக்கும் மேலாக என் மீது கவிஞர் வைத்திருக்கும் பேரன்பைப் பிரகடனம் செய்வது போலவும் பாடல்கள் அமைந்துள்ளன. பொதுவாகக் கவிஞர் சிங்கார வடிவேலனாரின் பாடல்களில் சொல்நயம், பொருள்நயம், கற்பனை வளம், நகைச்சுவைப் பாணி முதலியவை ஆங்காங்கு பளிச்சிடுகின்றன. திருமங்கையாழ்வாரின் திருமடல்கட்குப் பெருமை சேர்த்த கலிவெண்பா யாப்பும், எண்சீர், அறுசீர் விருத்த யாப்புகளும் இவர் கையாண்டுள்ள யாப்பு வகைகள். இவர்தம் பத்தாயிரம் பாடல்களும் பாங்குறப் பாகுபடுத்தப் பெற்று வெளிவந்தால், இவர் கையாண்ட யாப்பு வகைகள் தெளிவாகி இவர் புலமை வெளிப்படும். புகழும் பாராட்டும் மேலும் கிட்டும் என்று கூறி இவர் பற்றிய கவிதையை நிறைவு செய்கின்றேன்.