பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 வாழும் கவிஞர்கள் எங்குமுள இயற்கைபோல் மழலைப் பேச்சால் எம்மருங்கும் நடமாடி உழைத்த நல்லார் இங்கிவரே வெண்தாடி வேந்தர் என்றால் இவர்தானே பெரியாரென் றுரைக்கும் நாடும் உழைக்காமல் கதைபேசும் மாந்தர் போக்கை உளமார வெறுத்ததினால் பெரியார் ஆனார் தழைக்கின்ற நாடாகக் காண வேண்டித் தம்முழைப்பைத் தந்ததனால் பெரியார் ஆனார் இழைக்கின்ற நம்பிக்கைக் கொடுமை மாற்ற எவ்விடத்தும் உரைத்ததனால் பெரியார் ஆனார் அழைத்திட்ட பகுத்தறிவில் உள்ளம் தந்தால் அகங்களிக்கும் நல்வாழ்வே மலர்ந்து தோன்றும். மூதறிஞர் இராஜாஜியும் தந்தை பெரியாரும் - வடதுருவம்தென்துருவம் போல் கொள்கை வேறுபாட்டால் இருந்த இவர்கள்உயிர்மெய் எழுத்துப்போல இணைந்திருந்ததை நாடு நன்கு அறியும். காமராசர் :- பெருந்தலைவர் என்ற தலைப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன. அனைத்தும் எண்சீர் ஆசிரியவிருத்தப் பாடல்கள். எல்லார்க்கும் கல்விநலம் காண வேண்டி எவ்விடத்தும் எழிற்கல்விக் கூடம் கண்டார் எல்லையிலா மகிழ்ச்சிக்குள் இதயம் தந்தார் எப்பூசல் என்றாலும் தீர்க்கும் நெஞ்ச வல்லமைக்குள் சிறந்ததால் மக்கள் நெஞ்சில் வாழ்த்தாகப் பெருந்தலைவர் என்றே வாழ்ந்தார் நல்லாரின் நாயகராய்க் காம ராசர் நாடெங்கும் வாழ்கின்ற தலைவர் ஆனார். மன்னவரை உருவாக்கும் மன்னர் என்றே மாநிலத்தார் போற்றுகின்ற போதும் வாழ்வில் என்றென்றும் பற்றின்றி வாழ்ந்த நெஞ்சால் எல்லார்க்கும் மன்னர்ஆனார் காம ராசர் கன்னலெனும் தமிழின்பம் மழலை யாகக் காண்பதன்றோ காமராசர் மொழியும் பேச்சும் அன்பிற்குள் வெளிச்சமாய்க் காம ராசர் அளித்தவெலாம் தொண்டன்றி வேறென் னென்போம்! இந்த இரண்டு பாடல்களும் பெருந்தலைவர் காமராசரையும் அவர் ஆற்றிய நற்றொண்டுகளையும் செல்லோவியமாய்ப் படம் பிடித்துக் காட்டுகின்றன.