பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வாழும் கவிஞர்கள் சிறைக்குள்ளே துன்புற்றோர் கொடியோர் நாளில் செக்கிழுத்துத் துயருற்றோர், சேய்மை நாட்டில் குறைவளர இன்னலுற்றோர், கரும்புத் தோட்டக் கூலிகளாய் இடருற்றோர் நிலைகள் எண்ணி முறையிட்ட பாரதியின் கண்ணிர்ப் பாக்கள் முன்வைத்துத் தருவவெலாம் நெஞ்சப் பூக்கள் நிறைகின்ற விடுதலையை எண்ணிப் பள்ளு நிலைமொழிகள் தந்தவெலாம் உரிமைப் பாக்கள் ! இந்த இரண்டும் தேசியக் கவியைப் படம் பிடித்துக் காட்டி இவரை மக்கள் கவிஞராக்குகின்றன. இவர் எழுதிக் குவித்த சக்தி வழிபாட்டுப் பாடல்கள், இவரைச் சக்தி தாசராக்குகின்றன. நாட்டு விடுதலைக்குப் பாட்டுத் திறத்தாலே பணி செய்த பாங்கு நெஞ்சில் நிறைந்து நிற்கும் பான்மையது. இவரது நூற்றாண்டு விழா நினைவாக இவரைப் பற்றி நான்கு நூல்களை வெளியிட்டு இவர் பெருமையைப் போற்றினேன். பாரதிதாசனைப் பற்றி இந்தத் தலைப்பில் ஐந்து பாடல்கள் விடுதலைக்குப் பண்ணெழுப்பிப் பாட்டில் வாழும் வீறுதமிழ்ப் பாரதியார் தாச னாகிக் கெடுதலிலாத் தமிழ்நாட்டைக் காண வேண்டிக் கிளர்ந்தெழுந்து புரட்சிமிகு பாட்டுத் தோற்றம் விடுதலைகள் சமுதாயம் தனிலும் காண விரைந்திசைத்த செந்தமிழர் பாட்டு நெஞ்சர் நெடுங்கால நினைவுகளைக் காண நின்ற நிறைபாரதி தாசனிவர் புரட்சிச் சின்னம் ! செந்தமிழை நெஞ்சார நினைந்து பாடிச் சீரான நற்குடும்ப விளக்கும் ஏற்றிச் சந்தமுறும் இசையமுது சாற்றி நின்றார் சங்கத்துக் காட்சிகளைப் புதுக்கித் தந்தார் சிந்தைக்குள் தமிழினத்தின் சீர்மை எண்ணிச் சிலிர்ப்பூட்டும் பாவேந்தர் என்றே. ஆனார் விந்தைமிகு நல்லழகின் சிரிப்புப் பாடல் விதைத்தவரும் நம்புரட்சிக் கவிஞ ரன்றோ? இவை பாவேந்தரை ஓவியம் போல் சொல்லோவியங்களாக்கிக் காட்டுபவை. அறிஞர் அண்ணா இவருடைய அழகின் சிரிப்பிலுள்ள பாடல்களை மேடைதோறும் விளக்கிப் பேசி இவருக்குப் புரட்சிக் கவிஞர் என்று பெயர் சூட்டி அதனை நிலைக்கச் செய்தார். புரட்சிக் கவிஞரும் அண்ணாவின் அருங்கருத்துக்களைத் தாம் பேசும் மேடை