பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு:மு. சாந்த மூர்த்தி. 231 சொற்பொழிவாற்றுகின்றார். நெற்றியில் திரு நீற்றுப்பட்டை கடல்மடை திறந்தது போல் சொற்பெருக்கு.மேட்டூர் அணையில் நீர் வழிவதுபோல், சொற்பிரவாகம் அவர் திருவாயினின்றும் புறப்பட்டு வழிகின்றது. தாயுமான அடிகள இங்கு நின்று பேசுவது போன்ற தோற்றம், எதிரில் மாணாக்கர்களும், ஊர்ப்பெரு மக்களும் கடல்போல் திரண்டிருக்கும் காட்சி. பேச்சின் இறுதிக் கட்டத்தில் மழை எதிர் பாராதா வண்ணம் கொட்டோகொட்டு என்று கொட்டுகிறது. மழையைக் கண்டு அஞ்சாமல், மக்கள் கலையாமல் மழைப்பெருக்கில் நனைந்து கொண்டே சொற்பெருக்கில்-தாயுமானவர் தத்துவத்தில் ஆழ்ந்து செவிமடுக்கின்றனர். தேவரும் மழை காரணமாகப் பேச்சை நிறுத்தவில்லை. திறந்த வெளிக் கூட்டமாதலால் மழைப்பெருக்கில் நனைந்து கொண்டே சொற்பெருக்கு அவருடைய திருவாயினின்றும் வழிந்து கொண்டிருக்கின்றது. நிகழ்ச்சி:- 2 - இராமநாதபுர மாவட்டத்தில் இரு சாதியாரிடையே போர். தேவர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறையில் அட்ைக்கப் பெறுகின்றார். சில வீரர்கள் அவரைச் சிறையில் சந்தித்து, "உத்தரவு கொடுங்கள், நாங்கள் கதராடையினை அணிந்து, " அந்த மூவரையும்" தலைமைச் செயலகத்தில் தீர்த்துக் கட்டி நாங்கள் மரண தண்டனையை ஏற்கின்றோம்" என்று கூறி அவர்களைத் தடுத்து நிறுத்திய வள்ளல் பெருமான், கனவிலும் பயங்கரவாதத்தை விரும்பாத உத்தமர். 3. ಹಗಿತಗಹಣಿ! கவிஞர் சாந்த மூர்த்தி இரண்டு கவிஞர்களைப் பற்றியும் பாடியுள்ளார். - - பாரதியார்:- மக்கள் கவிஞர் என்ற தலைப்பில் ஐந்து பாடல்கள். அவற்றில் ஈண்டு இரண்டைத் தருகின்றேன். சிந்துக்குத் தந்தையெனப் பாடும் தேனி செந்தமிழின் புதுமைக்குள் வாழும் பாடல் சந்தங்கள் பாட்டிசைத்த கவிதை மன்னர் சங்கத்து மொழிச்சுவையில் திளைத்த நெஞ்சர் வெந்துயரின் கொடுமைகளைக் கண்டு கண்ணிர் விடும்பாடல் குவித்திட்ட பாட்டுக் குன்றம் சிந்தைக்குள் தமிழெண்ணிக் கனிந்த வேந்தர் சீர்பரவும் பாரதியார் மக்கள் செல்வம்